Tamilnadu

News April 17, 2024

தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நிறைவு

image

தேனி மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100 கி.மீ. தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணி அல்லிநகரம் நகராட்சியில் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 17, 2024

புதுவையில் தேர்தல் ரத்து செய்ய வலியுறுத்தி மனு

image

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காரைக்காலில் வாக்காளர்களுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினர் பணம் தருவதாகவும் இதனால் உடனடியாக புதுவை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இன்று காரைக்கால் அதிமுக மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

News April 17, 2024

நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

மதுரை, மணியாச்சியைச் சேர்ந்தவர் நாகம்மாள்(70). இவர் நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் நின்றபோது 60-வயது மதிக்கத்தக்க ஒருவர், முதியோர் உதவித் தொகை வாங்கித்தருவதாக கூறி நாகம்மாளை நம்ப வைத்து போட்டோ ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்றார். செயின் அணிந்தால் கிடைக்காது என சொல்லி கழுத்தில் அணிந்திருந்த செயினை கழட்டி பர்ஸில் வைக்க சொல்லினார். புகைப்படம் எடுத்தபோது முதியவர் பர்ஸை திருடி சென்றார்.

News April 17, 2024

கடலூர்: 3-ஆம் கட்ட நீச்சல் பயிற்சி

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் நேற்று துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது‌. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

News April 17, 2024

தி.மலை: முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்களை இன்று(17.04.2024) நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், அரசு அலுவலர்கள் இருந்தனர்.

News April 17, 2024

தேனி: பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

image

மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இன்று முதல்(ஏப்.17,18,19) வரை பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிர களப் பணியாற்றிட வேண்டும் எனவும், 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் மேலும் தெருக்கள், குறுகிய வீதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும் என தேனி தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News April 17, 2024

பழனி வழியே சிறப்பு ரயில் இயக்கம்

image

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி, கோவையிலிருந்து ஏப்.19,21 ஆகிய தேதியில் இரவு 8.40 மணிக்கு கிளம்பி பழனி வழியே, திருச்சி, தஞ்சை, கடலூர் வழியாக சென்னை எக்மோருக்கு காலை 10.05 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.

News April 17, 2024

கோவில்பட்டி: சுயேச்சை வேட்பாளருக்கு கொலை மிரட்டல்

image

கோவில்பட்டி பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று(ஏப்.16) முன்தினம் இவர் தட்டப்பாறை பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக தட்டப்பாறை போலீசில் நேற்று(ஏப்.16) புகார் செய்ததன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 17, 2024

குழந்தைக்கு பெயர் சூட்டிய இபிஎஸ்

image

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, ஜலகண்டாபுரத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஆண் குழந்தைக்கு ‘தீரன் ஆதித்யா’ என்று பெயர் சூட்டினார். இதில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 17, 2024

மதுரை: தகராறில் மண்டையை உடைத்த 5 பேர் கைது

image

திருமங்கலம் அருகே கரிசல்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராம்குமாருக்கும் வீட்டின் கழிவுநீர் செல்வதில் தகராறு இருந்து வந்தது. இன்று இத் தகராறு முற்ற ராஜ்குமார், சரவணக் கண்ணன், சுப்புலட்சுமி, கவிதா, அழகுராணி ஆகியோர் சேர்ந்து கட்டையால் வீராச்சாமியின் மண்டையை உடைத்தனர். திருமங்கலம் போலீசார் 5 பேரையும் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!