Tamilnadu

News April 17, 2024

மயிலாடுதுறையில் பாதுகாப்பு பணியிடம் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணியிடம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

News April 17, 2024

மயிலாடுதுறையில் தீவிர சோதனை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி யாரேனும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகள் , திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

News April 17, 2024

கடலூரில் ரூ.9.50 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 17, 18, 19-ந்தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இதனால் 3 நாட்கள் கடைகள் திறக்கப்படாது என்பதால், நேற்று கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் ரூ.9.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

News April 17, 2024

பழனியில் கண்காணிப்பு பணியில் போலீசார்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று(17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்திருக்கிறது. இதனையடுத்து பழனியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 17, 2024

தூத்துக்குடி: ரோந்து காவலர்களுக்கு எஸ்பி அறிவுரை

image

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக சிறப்பு வாகன ரோந்து பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. இதில் எஸ்பி பாலாஜி சரவணன் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

News April 17, 2024

பெண் காவலர் குடும்பத்திற்கு எஸ்பி நேரில் ஆறுதல்

image

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இன்று(17ம் தேதி) ஏற்பட்ட சாலை விபத்தில் தலைமை பெண் காவலர் பரிமளா உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் இறந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

News April 17, 2024

லாரி மோதி அடையாளம் தெரியாத பெண் பலி

image

வாலாஜா தாலுகா அம்மணந்தாங்கல் கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மதியம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார் . அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்தார். வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 17, 2024

விருதுநகர் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் 7,29,438 ஆண் வாக்காளர்களும், 7,64,760 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 202 பேர் என மொத்தம் 14,94,400 வாக்காளர்கள் வரும் 19 ம் தேதி வாக்களிக்க தயாராக உள்ளனர்.1,680 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக 186 வாக்குச்சாவடிகளும், 2 பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு அளித்தார்.

News April 17, 2024

கோவை: மரங்களை வெட்ட எதிர்ப்பு – முதல்வருக்கு மனு

image

ஆனைமலை – தாத்தூர் சாலையில் 100க்கும் அதிகமான புளிய மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துகள் அதிகம் நடைபெறுவதாக கூறி இந்த சாலையோர புளிய மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஏப்ரல் 17) முதல்வர் ஸ்டாலினுக்கு, நெடுஞ்சாலை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு பொள்ளாச்சி தபால் நிலையத்திலிருந்து மனு அனுப்பினர்.

News April 17, 2024

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

image

ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று(17.04.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!