India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி பாராளுமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 பேர். அரசியல் கட்சி மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் 16 பேர் போட்டி களத்தில் உள்ளனர். நீலகிரி தொகுதியில் இன்று (19 தேதி ) வாக்குபதிவு நிலவரம் காலை 9 மணி 8.7 சதவிகிதம் . 11 மணி 21.69 சதவிகிதம். பகல் 1 மணி 40.88 சதவிகிதம். பிற்பகல் 3 மணி 53.02 சதவிகிதம். அதை தொடர்ந்து மாலை 5 மணி நிலவரம் 64.31 சதவிதம் பதிவானது.

தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. தேர் காலை 7 மணி முதல் 7.20 மணிக்குள் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முதல்முறையாக வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆட்சியருடன் புகைப்படம் எடுத்துகொண்டனர். பின்னர், ஜனநாயக கடமை ஆற்றிய இளம் தலைமுறையினரை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

அரக்கோணம் அடுத்த சித்தேரியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அங்குள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.அங்கு பாமகவினர் கட்சி துண்டு அணிந்திருந்தனர் .இது தொடர்பாக திமுக பாமக இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வினோத் காந்தியின் கார் கண்ணாடி இன்று உடைக்கப்பட்டது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிடில் சாலை மறியல் செய்வோம் என்று திமுக நகர அவை தலைவர் துரை சீனி வாசன் தாலுகா போலீசாரிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட 1624 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஒட்டப்பிடாரம் வட்டம் மேல அரை குளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுகிறது. குறிப்பாக மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் காலை முதல் குறைவான அளவில் வாக்குப்பதிவு காணப்பட்டது. பிற்பகல் வரை சென்னையில் 35% குறைவாகவே வாக்குகள் பதிவாகின. கடும் வெயில் காரணமாக குறைவான வாக்குகள் பதிவானதாகவும், தொடர் விடுமுறையால் பெரும்பாலான சென்னைவாசிகள் சொந்த ஊருக்கு சென்றதாலும் வாக்குப்பதிவு குறைந்ததாக கூறப்படுகிறது.

ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா , இலக்கிய சம்பத் ஆகிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் முதல் முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றி, ஒற்றுமையாக மூவரும் ஒன்றாக வந்து வாக்களித்ததாக தெரிவித்தனர்.

திண்டுக்கல்லில் இன்று மாலையுடன் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சத்திரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. இதற்காக இங்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரவிலும் பகல் போல் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்களித்த ஒருவர் அதனை போட்டோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மக்களவை தொகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மதியம் 1:00 மணி நிலவரப்படி சோழவந்தான் 44.63%, உசிலம்பட்டி 42.82%, ஆண்டிபட்டி 36.04%, பெரியகுளம் 39.86%, போடிநாயக்கனூர் 44.74%, கம்பம் 40.3% என மொத்தமாக 41.28% வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.