India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுத் தேர்தல் 2024 இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 73 % வாக்குகள் பதிவாகியுள்ளது பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, லால்குடி, முசிறி, மணச்சநல்லூர், துறையூர் (தனி) ,பெரம்பலூர் (தனி), வாக்கிய பகுதிகளிலும் வாக்குப்பதிவான வாக்கு பெட்டிகள் தேர்தல் அலுவலர்கள், காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 6 மணியுடன் பல்வேறு பகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு பெற்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர் வாக்கு சாவடி எண் 28ல் 6 மணிக்கு முன்னர் 70க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். இவர்களுக்கு வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதியளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை ஆறு மணி முதல் நடைபெற்றது. தொடர்ந்து 6:00 மணிக்கு உள்ளாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 72.02% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 பாராளுமன்ற தேர்தல் காலை 7 மணி அளவில் தொடங்கியது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் காலையிலிருந்து மாலை வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை 75% வாக்குகளை பதிவு செய்தனர். வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தனர்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேர்தல் மையத்தில் வாக்காளர்களுடன் ஒருமையில் பேசிய தேர்தல் மைய அதிகாரி ஜெபஸ்டின் கோவில் பிள்ளையை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மற்றும் வட்டாட்சியர் உதவியுடன் காவல் துறையினர் வாக்கு மையத்திலிருந்து குண்டு கட்டாக வெளியேற்றினர். அவருக்கு பதிலாக அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் நியமிக்கப்பட்டார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதில், முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தநர் . மாலை 5 மணி நிலவரப்படி மொத்தமாக 58.39 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவானது. இதனால் 100% வாக்குப்பதிவு கேள்விக்குறியாகி உள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் நிறுவனங்கள், கடைகள் ஆகியவை பூட்டப்பட்டது. பொதுமக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக மும்முரம் காட்டினர். இந்நிலையில், இன்று மாலை நெல்லை டவுனில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையில் அல்வா வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் பெரிதளவில் இல்லை. இதனால், களை இழந்து காணப்பட்டது.

2024 மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருவதை முன்னிட்டு பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். உடன் எம்பி தர்மர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி புறநகர் பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதுவரை எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என நெல்லை மாநகர காவல் துறை கமிஷனர் மூர்த்தி தெரிவித்தார்.

அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிந்தங்கம்பள்ளி கிராமத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவர் கூறும்போது பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.