Tamilnadu

News May 2, 2024

புதுவையில் குரு பெயர்ச்சி விழா

image

புதுவை பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நவகிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்த நேரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

திருவையாறு அருகே தேர் திருவிழா

image

திருவையாறு அருகே தில்லைஸ்தானம் ஸ்ரீ அலர்மேல்மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் ப்ரஹ்மோத்ஸவ விழாவில் நேற்று(மே 1) தேரோட்டம் நடந்தது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, தேருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்ததை தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளை வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. இதை தொடர்ந்து மாலை தொட்டி திருமஞ்சனம் நடந்தது.

News May 2, 2024

சென்னை: நடிகர் நாசர் பெயரில் மோசடி!

image

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நாசர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் பெயரில் சிலர் போலி சமூகவலைத்தள கணக்குகளை உருவாக்கி மக்களை ஏமாற்றுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நாசர் பெயரில் போலி கணக்குகள் மூலம் நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

அரசு மருத்துவமனை பகுதியில் பகலில் எரியும் விளக்குகள்

image

உடுமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் கடந்து சில தினங்களாகவே பகலில் எரிந்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தலைமை மருத்துவரிடம் தெரிவித்தும் விளக்குகள் அணைக்கப்படவில்லை.  அலட்சியம் காட்டாமல் ஊழியர்கள் சரியான நேரத்தில் விளக்குகளை அணைக்க வேண்டும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.

News May 2, 2024

நெல்லை: கோயிலில் புகுந்து நகை திருட்டு

image

மூன்றடைப்பு அருகே உள்ள தாழைகுளத்தில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று (மே 1) அதிகாலை மர்மநபர் கோயில் பூட்டை உடைத்து புகுந்து அம்மன் சிலையில் இருந்த 3 பொட்டு தங்க தாலியை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அபிஷேக் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.

News May 2, 2024

கடலூர்:54 நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

image

நேற்று தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதனை மீறி கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காத மற்றும் பணியாளர்கள் பணிபுரிய முன்அனுமதி பெறாத 54 நிறுவனங்களுக்கு 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அபராதம் விதித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமு உத்தரவிட்டுள்ளார்.

News May 2, 2024

சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணி வெற்றி

image

கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் குன்னூர் புளூ வேனோம் கிரிக்கெட் அணி மற்றும் கோத்தகிரி சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணிகள் பங்கேற்று விளையாடின.
35 ஓவரில் 249 ரன்கள் எடுத்து கோத்தகிரி சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணி வெற்றி பெற்றது.

News May 2, 2024

இலவச கிரிக்கெட் பயிற்சி

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மதுரையில் 14 வயது, 16 மற்றும் 19 வயது நிரம்பிய ஆண்களுக்கு, இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிரிக்கெட் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராம் டிட்டோவை 96777 95400ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

திருவள்ளூர் அருகே ரத யாத்திரை

image

வடசென்னை, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கவுர நிதாய் ரத யாத்திரை திருநின்றவூரில் நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த ரத யாத்திரையை சிடிஎச் சாலையில் திருநின்றவூர் நகராட்சித்தலைவர் உஷாராணி ரவி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரதம் திருநின்றவூர் மேம்பாலம், பெரியபாளையம் சாலை, கோமதிபுரம் பிரதான சாலை, கோமதிபுரம் 3வது குறுக்குத் தெரு வழியாகச் சென்று திருநின்றவூர் இஸ்கானை அடைந்தது.

News May 2, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து

image

ஆறுமுகம் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் நேற்று மாருதி சுசூகி காரில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துார் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதி 10 அடி ஆழமுள்ள மழைநீர் செல்லும் கால்வாயில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்.

error: Content is protected !!