India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மழைநீர் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை ப்ரூக்பீல்ட்ஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ், நேற்று மழை பெய்தும் இன்று (மே.23)காலையில் மழை நீர் துளியும் இல்லாமல் பொதுமக்கள் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்த வண்ணம் சுத்தமாக உள்ளது.

விமான பயணிகளின் அதிகரிப்பை தொடர்த்து கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது என இன்று (மே.23) விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வானிலை காரணமாக 10 முதல் 20 நிமிடங்கள் முன்னர், அல்லது பின்னர் அல்லது குறித்த நேரத்தில் செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் ஆண்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் குழு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாட்டை தடுக்கும் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சேலம் ஜாகிர் அம்மாபாளத்தை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் மூத்த தலைவரான டாக்டர்கள் அசோகன் அபுல்ஹாசன் பிரகாசம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக வெளிவரும் தகவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூர் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் காய்ச்சல் இன்று (மே.23) முதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது

கொடைக்கானலில் உற்பத்தி செய்யப்பட்ட பிளம்ஸ் பழங்கள் தற்போது தேனி நகர்பகுதியில் விற்பனைக்கு வர துவங்கி உள்ளன. பிளம்ஸ் பழங்கள் கோடை காலமான மே-யில் துவக்கி ஒரு மாதம் விற்பனை செய்யபட்டு வரும். இந்தாண்டு வரத்து தாமதமாக துவங்கி உள்ளது. தற்போது கிலோ ரூ.280 முதல் ரூ.320 வரை விற்பனையாகிறது. பொதுமக்கள் பலரும் பிளம்ஸ் பழத்தினை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17ஆம் தேதி மலா் கண்காட்சி, கோடை விழா தொடங்கியது. டாபா்மேன், பப்பி, ஃபாரிட்டன் உள்ளிட்ட 12 வகையான சுமாா் 70 நாய்கள் பங்கேற்றன. நாய்களுக்கு 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் நாயின் தோற்றம், செயல்பாடுகள், கீழ்ப்படிதல், சாகசம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய நாய்கள் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டன .

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 12.46, 12.56 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.25 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 51.3.அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 2.7அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.4 அடி நீரும் இருப்பு உள்ளது.

நெல்லை மாவட்டம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமார் எரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரண வழக்கில் 11 தனிப்படை அமைத்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனை அடுத்து இன்று காலை இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை மற்றும் 156 அடி முழு கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 254.75 கன அடி தண்ணீரும், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 245 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக இன்று(மே 22) காலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 608 மாணவ மாணவிகளும், பிளஸ் ஒன் தேர்வில் 1247 மாணவ மாணவிகளும், எஸ்எஸ்எல்சி தேர்வில் 231 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல் எட்டாம் தேதி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.