Tamilnadu

News June 9, 2024

சிஐடியு அமைப்பு தின பேரவை கூட்டம்

image

திருவாரூர் தனியார் அரங்கில் சிஐடியு அமைப்பு தின பேரவை கூட்டம் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் (08.06.2024) நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது 500 ஆண்டு சந்தாவிற்கான தொகை 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிஐடியு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 9, 2024

நெல்லையப்பர்: 10 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் வருகை 13-ஆம் தேதி ஆணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் கலையரங்கில் 10 நாள் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நித்யஸ்ரீ மகாதேவன் இன்னிசை, வாசகி சொற்பொழிவு, “ப்யுசன் ” இசை, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரன் சொற்பொழிவு, செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி கிராமிய இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 9, 2024

பாண்டி கோயில் அருகே ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்

image

மதுரை பாண்டி கோயில், குறிஞ்சி வனம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், நேற்று போலீசாரைப் பார்த்தவுடன் தப்பியோட முயன்றனர்.
அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், உலகநேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (28) என்பதும், வழிப்பறியில் ஈடுபட அனைவரும் ஆயுதங்களுடன் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மனோகரனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த வாளை பறிமுதல் செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்

News June 9, 2024

புதுச்சேரி:தரமற்ற மடிக்கணினி விநியோகம்

image

புதுச்சேரியை சோ்ந்த ஒருவா் மடிக்கணினி வாங்க இணையதள நிறுவனத்தில் ரூ.1.15 லட்சம் செலுத்தியுள்ளாா்.பணம் செலுத்திய 3 நாள்களுக்குப் பிறகு அவருக்கு தனியாா் கூரியா் மூலம் மடிக்கணினி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.மடிக்கணினி மிகவும் தரம் குறைந்ததாக இருந்தது.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா்,இணையவழி குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.

News June 9, 2024

வரத்து குறைவு பச்சை மிளகாய் விலை கிடுகிடு

image

மழை காரணமாக பச்சை மிளகாய் வரத்து குறைந்து கொண்டே இருப்பதால், மார்க்கெட்டில் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் காரைக்குடி மார்க்கெட்டில் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது . ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்ந்து உள்ளது. சுபமுகூர்த்தம், விசேஷ தினங்களால் இன்று மேலும் விலை வரை செல்ல வாய்ப்புள்ளது.

News June 9, 2024

கோவை: 144 இடங்களில் 232 மையங்கள்

image

கோவை மாவட்டத்தில் 144 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள 232 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் அன்னூர் மேட்டுப்பாளையம் என மொத்தமாக பல மையங்களில் 69,737 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும். இதற்காக 13 பறக்கும் படைகள், 94 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News June 9, 2024

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை நேற்று அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சி பசுமைப் பள்ளத்தாக்கு, மோயர்பாயிண்ட், மற்றும் பல்வேறு பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணபட்டது. மாலை நேரத்தில் கொடைக்கானலில் அதிகமான குளிர் நிலவியது. இந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, செய்து மகிழ்ந்தனர்.

News June 9, 2024

நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் காரணமாக தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் வருகின்ற 10ம் தேதி முதல் வழக்கம் போல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். 

News June 9, 2024

வாழப்பாடி அருகே குட்கா கடத்தல்

image

சேலம், வாழப்பாடி அருகே நெடுஞ்சாலை பகுதியில் வாழப்பாடி போலீசார் வாகன சிகிச்சையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தலைவாசல் வரகூர் மருதையான் மகன் சிவபாலன் ( 35 ) என்பவர் விற்பனைக்காக கடத்திச் சென்ற சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருளை வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து சிவபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News June 9, 2024

விலங்குகள் ஆம்புலன்ஸில் பணிபுரிய பணி ஆணை வழங்கல்

image

தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு விலங்குகள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்காக தேர்வு மாவட்ட மேலாளர் தலைமையில் நேற்று (ஜுன்.8) நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஓட்டுனர் பணிக்கு 30 பேரும், உதவியாளர் பணிக்கு 65 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

error: Content is protected !!