India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாநகரில் 118 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பணியில் கான்ஸ்டபிளாக சேர்ந்தவர்கள் எவ்வித குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் 25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தால் அவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கப்படும். இதன்படி 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மதுரை நகரில் பணியாற்றும் 118 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் ஜூன் 21 தேதி காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகள் சம்மந்தமான மனுக்களை ஜூன் 11 தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்: 72 , உதகை 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு .அருணா தெரிவித்துள்ளார்.

மதுரையில் வேளாண்துறை சார்பில் 13 வட்டாரங்களில் உள்ள 10 ஆயிரத்து 100 விவசாயிகளின் வயலில் இலவச மண் பரிசோதனை செய்யப்படுகிறது. மண்ணின் தன்மைக்கேற்ற பயிரைத் தேர்ந்தெடுத்து மகசூல் பெறுவதற்கும் உரச்செலவை குறைப்பதற்கும் மண் பரிசோதனை அவசியம் என்பதால் இந்த பரிசோதனை செய்து அதற்கேற்ப சாகுபடியை பரிந்துரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

திருச்சி அஞ்சல் துறை கோட்டத்தில் உள்ள அனைத்து புதுப்பிப்பு மையங்களிலும் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டு நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர்ந்து இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள்,ஆதார் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

கோவையில் உலக சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில் சர்வதேச சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் பரவை ஆசான் காட்டுராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்கள் வயது மற்றும் போட்டி பிரிவுகளில் 11 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர். இதையடுத்து பரவையில் மாணவ மாணவியருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண்மை குறித்த 5 நாட்கள் பயிற்சி வகுப்பு ( நேற்று 8) நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கி இயற்கை முறையில் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பேசினார். இதில் 30 மகளிர் சமுதாய களப்பயிற்றுனர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மாநிலம் முழுவதும் இன்று குரூப்-4 தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 267 தோ்வு மையங்களில் 73, 224 போ் எழுதுகின்றனா் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் அதாலத் நேற்று நடந்தது. இதில்
1,048 வழக்குகளுக்கு ரூ.7.10 கோடி தீர்வு தொகை வசூலானது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன்ராம், சார்பு நீதிபதி அகிலாதேவி நீதித்துறை நடுவர்கள் நிலவேஸ்வரன், பிரபாகரன் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,587 வழக்குகளில் ரூ.6.11 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது. இதில்
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், காசோலை வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பல்லடம் வனம் அமைப்பு, திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் பொன்னி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறிவதற்கான இலவச மருத்துவ முகாம் ஆகியவை, வனாலயம் அடிகளார் அரங்கில் நேற்று நடைபெற்றது. ரத்ததான முகாமில், மொத்தம் 29 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.