Tamilnadu

News June 11, 2024

தர்மபுரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில் (NADCP)5 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள்(ஜூன் 10) முதல் (ஜூன் 30) வரை முகாம் நடைபெறுகிறது. மேலும் கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய 83 குழுக்கள் அமைக்கப்பட்டு இப்பணி அனைத்தும் கிராமங்களிலும் மலை கிராமங்களில் உள்ள மாடுகள் எருமைகளுக்கு செலுத்தப்பட உள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

நெல்லை மாணவர்களை சந்திக்கும் விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்க உள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களை வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் வைத்து நடிகர் விஜய் சந்தித்து பாராட்ட உள்ளார். இதற்கான ஏற்பாட்டை திருநெல்வேலி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

News June 11, 2024

வேகத்தடை அமைக்கும் பணி

image

அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் சாலையை எளிதாக கடக்க ஏதுவாக வேகத்தடை அமைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்தனர், இதனால் அரசு கலைக்கல்லூரி முன்பு அதிவேகமாக செல்லும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை நெடுஞ்சாலை துறையினால் இன்று(ஜூன் 11)அமைக்கப்படுகிறது.
கல்லூரி தூங்குவதற்கு முன் பணிகள் முடிவடைந்துவிடும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News June 11, 2024

காரைக்குடி சந்தையில் காய்கறி விலை தொடர்ந்து உயர்வு

image

காரைக்குடி காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறி தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.110 உயர்ந்து நேற்று ரூ.150க்கும், ரூ.80 க்கு விற்பனையான பச்சை மிளகாய் ரூ.120க்கும், உருளைக்கிழங்கு ரூ.44, சின்ன வெங்காயம் ரூ.70, கத்தரி ரூ.40, வெண்டை ரூ.40, முருங்கைக்காய் ரூ.60, தக்காளி ரூ.35, பீர்க்கங்காய் ரூ.80 குடைமிளகாய் ரூ.80, இஞ்சி ரூ.170க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News June 11, 2024

புதுவையில் நீட் தேர்வு முடிவு நகல் எரிப்பு

image

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காமராஜர் சதுக்கத்தில் போராட்டம் இன்று நடைபெற்றது.
போராட்டதில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். போராட்டத்தில் நீட் தேர்வு முடிவு நகலை தீயிட்டு கொளுத்தினர்.

News June 11, 2024

தமுக்கம் மாநாட்டு மைய அரங்க ஆன்லைன் மூலம் முன்பதிவு

image

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையம் அரங்கத்தை இணைய வழி மூலம் முன் பதிவு செய்வதற்கான சேவையினை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார், ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு புதிய பொறுப்பு

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதம சிகாமணி விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமனம் செய்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

மாற்று விடுமுறை வழங்க ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

image

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, பணி செய்யும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கார்டு ஒன்றுக்கு 50 பைசா வழங்கப்படுகிறது. அதனை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். ஞாயிறன்று பணியாற்றும் ரேஷன் பணியாளர்கள் மாற்று விடுமுறை எடுக்க அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

News June 11, 2024

மயிலாடுதுறை: அத்தியாவசிய பொருள் வழங்கல்

image

மயிலாடுதுறை திரு இந்தளூர் ஊராட்சியில் உள்ள பல்லவராயன் பேட்டையில் அமைந்துள்ள சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிட பள்ளியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி மாணவ செல்வங்களுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏ வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு வழங்கினார்.

News June 11, 2024

விருதுநகர் மாணவர்களுடன் உணவு அருந்திய ஆட்சியர்

image

விருதுநகர், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

error: Content is protected !!