India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் பங்கேற்று பயனடைய ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26 & 27 ஆகிய நாட்களிலும், உடலியக்க குறைபாடு, காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ஆம் தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இன்று ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை மனுவாக கேட்டு எழுதி வாங்கினார். இந்நிகழ்வில் ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, உதவி இயக்குனர் இயக்கியப்பன் பலர் கலந்து கொண்டனர்.

வேப்பூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகின்ற 19ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டரால் மனுக்கள் பெறப்படவுள்ளது . அதன்பிறகு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

செங்கல்பட்டு அடுத்த நென்மேலி பகுதியில் கடந்த 7ம் தேதி யுவராஜ் (41) என்பவரை மர்ம நபர்கள் தலை மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். வழக்கில் இரண்டு பேரை கைது செய்தனர். சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இருவரை இன்று ஜூன் 11ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கென 49 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வரை, கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., ,பாலிடெக்னிக் மாணவர்களும் சேர தகுதி உடையவர்கள். கல்லுாரி மாணவர்கள் ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போதைய(2024-2025) கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் தமிழ் வழியில் ஒரு மாணவரும் , ஆங்கில வழியில் ஒரு மாணவரும் என மொத்தமாக இரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது போன்ற பள்ளிகளை அரசு மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேவாரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று அவிநாசியப்பர் கோவில் அருகே முழு போதையில் தள்ளாடியபடி வந்த மணி, பொன்னுச்சாமி ஆகிய இருவரையும் கவனமாக போகும்படி கூறினார். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் பாண்டியனை சரமாரியாக தாக்கி, மணி தான் வைத்திருந்த கத்தியால் பாண்டியனை குத்தினார். தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரணை.

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 9க்கு உட்பட்ட உறையூர் மேட்டு தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியினை இன்று(ஜூன் 11) மாநகராட்சி ஆணையர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியின் தூய்மை குறித்தும், கழிவறைகளின் சுத்தம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார்.

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை திறன் மேம்பாட்டு கழகம் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங், தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. https://tntextiles.tn.gov.in/jobs/ இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் இன்று (ஜூன் 11) விடுத்துள்ள அறிக்கையில்: நெல்லை மாநகராட்சி எல்லை பகுதியில் எந்த இடத்திலும் மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பலகைகள், பதாகைகள் மற்றும் பேனர்கள் போன்றவை வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பவர்கள் அடுத்த 7 தினங்களுக்குள் அகற்ற வேண்டும். தொடர்ந்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.