Tamilnadu

News June 12, 2024

விழுப்புரம் எம்பி உதயநிதியை சந்தித்து வாழ்த்து

image

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி சென்னையில் நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.

News June 12, 2024

திருப்பூர் அருகே மாணவர் சேர்க்கை

image

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் சேர்ந்தனர். இன்று நடைபெறும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10 வகுப்பு, பிளஸ் -1 , பிளஸ் -2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஜாதி சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை கொண்டு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 12, 2024

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புச் சான்றிதழ் பயிற்சி!

image

புதுகை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கட்செவி அஞ்சல்(வாட்ஸ் ஆப்) குழு மூலம் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புச் சான்றிதழ் பயிற்சி தொடக்கவிழா நேற்று நடந்தது. இதில் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். முன்னதாக ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் எம்.பெரியசாமி பயிற்சியை தொடங்கி வைத்தார். கள ஆர்வலர் டி.விமலா வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர் பிரிட்டோ நன்றி கூறினார்.

News June 12, 2024

ராணிப்பேட்டை: திமுக செயற்குழு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் (பாரதி நகர் மாவட்ட கழக அலு­வ­ல­கத்­தில்) மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News June 12, 2024

நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரி, இரவு வெப்பம் 73.4 டிகிரி அளவுகளில் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 12, 2024

நெல்லை: பத்திரத்தை மீட்டெடுத்த போலீசார்

image

அம்பை அடுத்த வி.கே.புரம் டாணா பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ரவிக்குமாருக்கு சொந்தமான அசல் உயில் பத்திரம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்ததை துரிதமாக கண்டுபிடித்துக் கொடுத்து ஊனமுற்றோர் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்த விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் சுர்ஜித் ஆனந்த், உறுதுணையாக இருந்த எஸ்ஐ ஆறுமுகம் மற்றும் காவல் துறையினருக்கு அவரது குடும்பம் சார்பில் இன்று நன்றி தெரிவித்தனர்.

News June 12, 2024

வெளிநாடு சேர்ந்தவரை தங்க வைக்க C-Form அவசியம்

image

திருவண்ணாமலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை தங்களது வீடு, தங்கும் விடுதி, ஆசிரமம், போன்ற வளாகங்களில் தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பிரத்யேக இணையதள முகவரியின் பயனாளர் அடையாள எண்ணை தி.மலை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

News June 12, 2024

ஒரத்தநாடு: இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

image

மின்வாரிய உதவி பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(ஜீன் 12) ஈச்சங்கோட்டை, மருங்குளம், நடுவூர், சூரியம்பட்டி, வேங்குராயன்குடிகாடு, வடக்கூர், கொல்லங்கரை, சாமிப்பட்டி, பாச்சூர், துறையூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

News June 12, 2024

மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

image

மயிலாடுதுறை காவல் சரக பகுதியில் 16 வயது சிறுமியை உதயகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் உதயகுமார் , ரஞ்சித் ஆகிய இருவரை இன்று(ஜூன் 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 12, 2024

திருவள்ளூர்: குடியிருப்பு கட்டி தருவதாக மோசடி

image

பூந்தமல்லி, லட்சுமி நகரில் திரைப்பட இயக்குநர் கண்ணன் (54) என்பவருக்கு சொந்தமான 1038 சதுரடி நிலத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.14 லட்சம் பணம் கொடுப்பதாகக் கூறி அவரது மைத்துனர் சென்னையை அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகார்த்தி (43) என்பவர் ஏமாற்றியுள்ளார். புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த ஜெய கார்த்தியை நேற்றிரவு கைது செய்தனர்.

error: Content is protected !!