India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மூலனூர் ஒன்றியம், மூலனூர் அறப் போர் இயக்கத்தின் சார்பில் வருகிற ஆக.23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மூலனூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள திலகம் திருமண மண்டபத்தில், இலவச தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவணாமலைக்கு நவதுவாரபதி என்ற பெயர் உண்டு. நவம்- ஒன்பது, துவாரம் – வாயில்கள், பதி – அரசன். ராஜ கோபுரம், பேய் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், தெற்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், வடக்கு கட்டை கோபுரம் என இங்குள்ள 9 வாயில்களுக்கு அரசனாக சிவன் இருப்பதால் நவதுவாரபதி என அழைக்கப்படுகிறது. நம்ம திருவண்ணாமலை பெருமையை ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு இந்திய விமான படையில் அக்னிவீர் (வாயு) (OS) பணிக்கு ஆட்சேர்ப்பு , தாம்பரம் விமானப்படை வளாகத்தில் செப்டம்பர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு ஜூலை 1, 2025 அன்று நிலவரப்படி, 17 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள்:
▶️கோட்டைக்குளம்
▶️நத்தம்: அம்மன் குளம்
▶️வத்தலகுண்டு: கண்ணாப்பட்டி ஆறு
▶️நிலக்கோட்டை: அணைப்பட்டி வைகை ஆறு
▶️பழனி: சண்முகநதி,
▶️ஒட்டன்சத்திரம்: தலைக்குத்து அருவி
▶️கொடைக்கானல்: டோபிகானல்
▶️வேடசந்தூர்: குடகனாறு
▶️வடமதுரை: நரிப்பாறை
▶️குஜிலியம்பாறை: பங்காளமேடு குளம்
▶️சின்னாளப்பட்டி: தொம்மன்குளம்
▶️தாடிக்கொம்பு: குடகனாறு (SHARE)
ஈரோடு மக்களே.., வருகிற ஆக.22ஆம் தேதி சென்னிமலை சாலையில் உள்ள ஐடிஐ வளாகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வை நடத்த உள்ளனர். இந்த முகாம் அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்களுக்கு<
திருப்பூர் மக்களே…, வருகிற ஆக.22ஆம் தேதி பல்லடம் சாலையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார். 10 தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கும் வேலைகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்களுக்கு <
மேட்டூர் அணைக்கு கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணையிலிருந்து முறையே வினாடிக்கு 70,000 கன அடி மற்றும் 25,000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
புழல், காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் காதர் பாஷா. இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி நிலவர் நிஷா அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.கடந்த 10ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் நிலவர் நிஷா, எண்ணெயை கொதிக்க வைத்து, துாங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஊற்றினார். உடல் முழுவதும் வெந்த நிலையில், காதர் பாஷா நேற்று சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52), இவருடைய மகன் ஈஸ்வரன் (18), பாஸ்கரின் நண்பரான பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (54) மற்றும் ஓட்டுநர் தனபால் (53) ஆகியோர் சென்னை நோக்கி சென்றபோது, பின்னால் வந்த ஒரு வாகனம் கார் மீது மோதியதில், கார் உருண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் பாஸ்கர் உயிரிழந்தார். ஈஸ்வரன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 120 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்துள்ளனர்.இந்த மனுக்களில், 67,904 பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.