India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ராமர் மகன் அருள்முருகன் (28) நேற்று முன்தினம் விளாங்குடி கணபதி நகரில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கொலை செய்த காமராஜர் சாலையை சேர்ந்த காளி ஆனந்த், நாகார்ஜூன், அருண்குமார் ஆகிய 3 பேரை நேற்று இரவு கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்து வருவதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 4 டன் எலுமிச்சை விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது 1 டன் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக 1 கிலோ எலுமிச்சை பழம் ரூ. 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுக்கூரை அடுத்த சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பவதாரணி (22). இவர் நர்சாக வேலை பார்த்து வந்தார். (ஏப்,26) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எண்ணெய் கேன் தவறி அடுப்பு மீது விழுந்து தீ உடல் முழுவதும் பரவியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி பவதாரணி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா பகுதிக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் 29.04.2024 அன்று முதல் 04.05.2024 வரை ட்ரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறக்கதடை விதிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காட்பாடி, காங்கேயநல்லூர் பாலாற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் மிகவும் கருணை நிறைந்த தெய்வமாகும் . இந்த திருத்தலத்தில் 48 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கங்கையம்மன் இரண்டாம் நாள் உற்சவம் மிக சிறப்பாக நேற்று இரவு நடைபெற்றது.இதில் கங்கையம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று மகிழ் 24 என்ற தலைப்பில் நடைபெற்ற கலை மற்றும் இலக்கிய விழாவினை விருதுநகர் கலெக்டர் வீ.ப.ஜெயசீலன், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் மகிழ் 24 என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

திருச்சி புதிய கலையரங்கத்தில், கல்யாணமாலை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. கடந்த 24 ஆண்டுகளில் 5 லட்சத்திற்கு மேலான திருமணங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள கல்யாண மாலை நிகழ்ச்சி இன்று காலை 9 மணி முதல், மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்யாணமாலை மோகன். மீரா மோகன், ரமேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) தூத்துக்குடிமாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சி எமப்பேர் பகுதி முரளி(20) என்ற இளைஞர் தனது வீட்டு அருகில் தனது நண்பரான அருகில் உள்ள சின்ன சேலம் வட்டம் பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (27) என்பவரை உடன் வைத்துக்கொண்டு கஞ்சா வியாபாரம் செய்த போது போலீசார் இவர்கள் இருவரையும் பிடித்து இன்று கைது செய்தனர். பின்னர், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.