Tamilnadu

News May 6, 2024

விருதுநகர்: வெடி விபத்து.. 4 பேர் காயம்

image

விருதுநகர், சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ரசாயன பொருட்கள் தயாரிக்கும் குடோனில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

News May 6, 2024

நுங்கம்பாக்கம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

image

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 35 பள்ளிகளில் இருந்து மொத்தம் 4998 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 4355 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 87.13 ஆகும். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள்

image

இன்டர்நேஷனல் ஓபன் சிலம்பம் செம்பியன் 2024 போட்டிகளில் சின்னமனூர் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்பம் கலைக்கூடம் மாணவர்கள் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சின்னமனூர் வீராங்கனைகளுக்கு ஆசான் ஈஸ்வரன் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News May 6, 2024

நாகை: 478 மதிப்பெண்கள் பெற்று அசத்திய இரட்டையர்கள்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் நிகில், நிர்மல் இரட்டையர்களான இருவரும் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

News May 6, 2024

செங்கல்பட்டு தேர்ச்சி சதவீதம்

image

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.06) வெளியாகியுள்ளது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். செங்கல்பட்டில் மொத்தம் 25,742 பேர் தேர்வெழுதிய நிலையில், 23,907 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.29 சதவீதமும், மாணவர்கள் 92.82 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 2.19% அதிகரித்துள்ளது.

News May 6, 2024

 வாணியம்பாடி மாணவி முதலிடம்

image

வாணியம்பாடி அல்ஹுதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆதீலா நிஹால் +2 அரசு பொது தேர்தலில் 600 மதிப்பெண்களுக்கு 596 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடமும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி மின்ஹா கவுனேன் 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளி செயலாளர் படேல் முஹம்மத் யூசுப், பள்ளி முதல்வர் பாராட்டினார். 

News May 6, 2024

மறு மதிப்பீட்டிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தொடக்க பள்ளிக்கல்வி இயக்குநர் சேதுராம வர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ” மாணவர்கள் தங்களை மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (மே7) ஆன்லைன் மூலமாகவோ அல்லது பள்ளிகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால் விடைத்தாள் நகலை பெற விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்தார்.

News May 6, 2024

பெரம்பலூர் : மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

image

பெரம்பலூர் மாவட்டத்தில்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் k.கமலி மற்றும் செனிதா என்ற இரண்டு மாணவிகளும் 593/600 முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சிவசுப்பிரமணியம் இனிப்பு வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

News May 6, 2024

அரசு பள்ளி 8 ஆண்டுகளாக சாதனை

image

வானூர் தாலூகா கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவி சபிதா 537 மதிப்பெண்ணும், ஜனனி 520, ஷாலினி 510 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்தப் பள்ளி வானூர் வட்டார பகுதியில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்த பள்ளிக்கு பொதுமக்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

News May 6, 2024

ஆவடி அருகே கத்தி குத்து: ஒருவர் கைது

image

ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்யராஜ் (36). இவரது மனைவி சுகன்யா (33). இந்த நிலையில் நேற்று தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கத்தியால் சுகன்யாவின் கழுத்தில் சத்யராஜ் சரமாரியாக குத்தியுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!