Tamilnadu

News April 29, 2025

BREAKING நெல்லை டவுனில் வருமான வரித்துறை சோதனை

image

திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் காஜா பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் இங்கே சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு பிரிவினரும் வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

News April 29, 2025

சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

image

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க கூறியுள்ளது.

News April 29, 2025

தஞ்சை கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

தொழிலாளர் தினமான (மே.1) தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

நான்கு சக்கர வாகன வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறையில் புதிய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து பழைய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை நேரில் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

News April 29, 2025

தஞ்சை பெரியகோயிலில் பந்தல்கால் முகூர்த்தம்

image

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருத்தேரோட்ட பந்தகால் முகூர்த்தம் நாளை (30-04-2025) காலை 9 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 29, 2025

சேலத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை!

image

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறினார். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என உளவுப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் போலீஸ் சரகத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை. முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப்

image

ஆபத்தில் உள்ள நபர் அல்லது அருகிலுள்ளவர் இந்த சிவப்பு பொத்தானை அழுத்தினால்:
* காவல்துறைக்கு உடனடி அழைப்பு
* அருகிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஒலி
* வீடியோ கால் மூலம் நேரடி காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு
* ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவில் வருகை
* கேமரா பதிவு மூலம் புலனாய்வு மற்றும் நடவடிக்கை

News April 29, 2025

பெண்கள் பாதுகாப்புக்கு ‘ரோபோட்டிக் காப்’

image

* 24X7 நேரடி கண்காணிப்பு
* 360° வீதியிலும் பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன்
* எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான்
* எச்சரிக்கை ஒலி மற்றும் உடனடி காவல் அழைப்பு
* GPS மூலம் துல்லிய இடம் கண்காணிப்பு
* உயர் தர கேமரா மற்றும் மைக்ரோபோன்
* பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பு

News April 29, 2025

தி.மலை: சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம்

image

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் 2025 சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகுத்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை மாதம் 28 ஆம் தேதி (11.05.2025) இரவு 08.47 மணி முதல் சித்திரை மாதம் 29ஆம் தேதி (12.05.2025) இரவு 10.43 மணி வரை உகந்த நேரமாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News April 29, 2025

அமைச்சரிடம் மனு அளித்த  நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பந்தலூர் மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் அன்றாடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலரும் நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர் எஸ்கேராஜ் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

error: Content is protected !!