India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரத்தில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த காதர் மொய்தீன், திமுக வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பாடுபடும் எனக் கூறினார்.

ராம்நாடு: திருப்புல்லாணி அருகே பெரியபட்டினம் ஊராட்சியில் 5.75 ஏக்கர் பரப்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கான மினி ஸ்டேடியம் ரூ.3 கோடி மதிப்பில் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று (ஜூன்.30) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க ரூ.1.57 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தங்கவேல் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கோழி வளா்க்கும் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறு பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி விண்ணப்பிக்காலம் என தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க ரூ.1.57 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கோழி வளா்க்கும் திறன் கொண்ட பயனாளிகளுக்கு பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி ஜூலை 10க்குள் விண்ணப்பிக்காலம் என தெரிவித்துள்ளாா்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை தலைவர் பதவிக்கு பேராசிரியை தனலட்சுமியை புறக்கணித்து, வெங்கடேஸ்வரனை நியமித்தது சமூக அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து தகுதிகளும் இருந்தும் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மூத்த பேராசிரியை தனலட்சுமிக்குதான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா கலந்து கொண்டார்.

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தென்காசி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கும் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம், ஐந்தருவி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் இன்று கேட்டுக்கொண்டனர்.

திருவாரூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் கால அட்டவணை ரயில்வே துறை அறிவித்துள்ளது. வண்டி எண் 16362 வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில் வாரம் இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 8 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்படும். திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, சிவகாசி, தென்காசி வழியாக எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கான நேர்முக நேர்காணல் வருகின்ற 2ஆம் தேதி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஓட்டுநர்கள் தங்களது ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 5 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று குமரி மாவட்ட போலீசாரின் குறை கேட்டறியும் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. அப்போது மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம் பேசும் போது, “ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விழிப்புடன் செயல் பட வேண்டும். கைதிகளை அழைத்து செல்லும்போதும், முக்கிய பிரமுகர்களின் வழிக்காவல் பணியில் ஈடுபடும் போதும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.