India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரந்தூர் கிராமத்தில் 2வது பசுமை விமான நிலையம் அமைவதை எதிர்த்து அப்பகுதியில் வாழும் 13 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசை கண்டித்து 661வது நாளாக நேற்று(மே 16) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில்,
கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட, மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், பகுதிச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் 602 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவப்பு நிறத்திலான சொகுசு பஸ்கள் 180. மகளிர் இலவசமாக பயணிக்க கூடிய வகையில் 422 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்கான பஸ்களை அடையாளம் காண வெளிர் நீல நிறத்தில் 16 டவுன் பஸ்கள் ஜிபிஎஸ் வசதியுடன் நேற்று முதல் முதற்கட்டமாக இயக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் அழகாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கோடை கால கூட்ட நெரிசலை குறைக்க, சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயிலில், நாளை (17.5) முதல் வரும் 23ம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும்.
அதேபோல், திருவனந்தபுரம் – மதுரை ரயிலில் இன்று (16.5) முதல் வரும் 21ம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை, பட்டாபிராம் துணைமின் நிலையத்தில் இன்று(மே 17) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பட்டாபிராம், தண்டுரை, ஐயப்பன் நகர், சேக்காடு, கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, தென்றல் நகர், முல்லை நகர், வெங்கடாபுரம், அண்ணா நகர், சி.டி.எச்.ரோடு, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, காமராஜபுரம், சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அரசு பொது நூலகத்திற்கு கம்ப்யூட்டர் மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு வள்ளுவர் வாசகர் வட்ட தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கிய புனித லூக்கா சமுதாய கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் நேற்று (மே 16) இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சகாப்தின் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கிடப்பில் உள்ள நந்தன் கால்வாய் திட்டத்தை முடிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும்போது பாட நோட்டு புத்தகங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10% வரை பாடநோட்டுகள் விலை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லாங் சைஸ் நோட்டு இப்போது 25 ரூபாயாக குறைந்துள்ளது. டிராயிங் நோட்டு, கணக்கு நோட்டு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது ஐந்தாம் படை வீடான முருகன் கோவில். இந்த கோவிலுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த மூன்று வாரங்களில் பக்தர்கள் காணிக்கையை செலுத்தப்பட்ட பணம் நேற்று எண்ணப்பட்டது. இதில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.