India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 2025ம் ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் <

சிவகங்கை மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தொலைந்து போன அலைபேசிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்.பி.,நேற்று அலுவலகத்தில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் ஏப். மாதம் வரை தொலைந்து போன 104 அலைபேசிகள் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 54 ஆயிரம். கண்டுடிக்கப்பட்ட போன்களை அதன் உரிமையாளரிடம் எஸ்.பி.,யும்., கூடுதல் எஸ்.பி.,யும் வழங்கினர்.

திருபுவனம் வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சரபர் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் எஜமான் உத்தரவு பெறும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மழையூர் அருகே உள்ள வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் வினோத் (32).இவரது மனைவி செல்வி (25). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு செல்வி வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மகன் சதீஷ் குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகேசன் சதீஷ்குமாரை வெட்டியுள்ளார். இதில் இடது கையில் படுகாயம் ஏற்பட்டு சதீஸ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (மே 18) காலை 8 மணி நிலவரப்படி மொத்தமாக 274.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 52.40 மி.மீ, நம்பியார் அணைப்பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தேனி, கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. 40 அடி உயரத்திலிருந்து விழும் இந்த அருவி, ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை இதன் சீசனாக இருக்கிறது. இதன் அருகில் சுருளியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இவ்வருவி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கீழ்ச் சுருளி, மேல்ச்சுருளி என இரு இடங்கள் உள்ளன. இங்கு இமயகிரிச் சித்தர் தவம் ஆற்றியதாகவும் கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் பழனி, அம்சா அவர்களின் மகள் சுபஸ்ரீ. இவர் நடந்த முடிந்த 10ஆம் வகுப்பு தேர்வில் 500/491 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாவது இடத்திலும், வி.கே மாங்காடு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். இதனை அடுத்து திமுக மாவட்ட கழக பொருளாளர் A.V. சாரதி அவர்களிடம் வாழ்த்து பெற்று அவரின் உயர் கல்விக்கான உதவித்தொகையை வழங்கினார்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா (21) என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பு முதல் குட்டிதெரு சந்திப்பு வரை மெட்ரோ பணி நடைபெறவுள்ளது. இதனால் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள், வடமலை தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடமலை தெரு, அருணாசலம்தெரு, வெங்கடேச பக்தன்தெரு வழியே செல்லலாம். இது ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.