Tamilnadu

News May 7, 2024

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் 510 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு,515 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இதனிடையே வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதாகவும்,மீன்பிடிக்காலம் தொடருவதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாலும் முட்டை விலை உயர்வடைந்துள்ளது

News May 7, 2024

கடலூரில் 100 நாள் வேலை கேட்டு மனு

image

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,கடலூர் ஊராட்சி பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலை கொடுக்கப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடியாக வேலை வழங்குமாறு மனுவில் கூறியிருந்தனர்.

News May 7, 2024

கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

image

ஊத்தங்கரை பகுதியில்
கடுமையான கத்திரி வெயிலுக்கு மத்தியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி கல்லாவி, காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, பெரிய தள்ளப்பாடி,
அனுமன் தீர்த்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

News May 7, 2024

நாங்குநேரி மாணவனுக்கு உறுதியளித்த அமைச்சர்

image

தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் மாணவன் சின்னதுரை உயர்கல்விக்கு அனைத்து வகையிலும் ஏற்கனவே கூறியபடி நான் துணை நிற்பேன் என்று உறுதிப்படுத்தி உள்ளார். கல்வி மட்டுமே சமத்துவம் வளர மிகப்பெரிய ஆயுதம் எனவும் தெரிவித்துள்ளார்.

News May 7, 2024

திண்டுக்கல் மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் கீழ் இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு அசோக் நகர் பகுதியில் நிலத்தடி நீர் குழாய் சரிபார்த்து சின்டெக்ஸ் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் சின்டெக்ஸ் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News May 7, 2024

தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளை

image

தர்மபுரி அருகே மொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சாந்தி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கழிவறை செல்வதற்காக வெளியே வந்தபோது 2 நபர்கள் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து 47 ஆயிரம் பணம் மற்றும் சாந்தியின் கழுத்திலிருந்த 7.5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர் . இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்
விசாரிக்கின்றனர்.

News May 7, 2024

கொழுமம் கோவில் சித்திரை திருவிழா: எம்எல்ஏ தரிசனம்

image

மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான C.மகேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அன்னதானம் வழங்கினார்.

News May 7, 2024

இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை

image

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் 8-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன், ஆட்டோ டிரைவர், மனைவி ஆனந்தி. முனியன் சரிவர ஆட்டோ ஓட்ட செல்லாமல் மதுகுடித்து விட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆனந்தி நேற்று மதியம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

News May 7, 2024

தூத்துக்குடி அருகே காதல் மனைவி தற்கொலை

image

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் மனைவி பேச்சியம்மாள் (18). இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பேச்சியம்மாள் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டிஎஸ்பி மாயவன் தலைமையிலான சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 7, 2024

கரைசுத்துபுதூரில் போலீசார் விசாரணை

image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 7) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!