India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், நாகர்கோவில் நாகராஜா திடலில் காமராஜரின் 122 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. கிள்ளியூர் எம்.எல்.ஏ.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பரிசு வழங்கி கெளரவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், கரும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் முறையாக நீர் வருகிறதா என்பதையும் குழாய்களை திறந்து பார்த்து நேரடியாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விடுதி காப்பாளர் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதத்தின் 3-வது புதன்கிழமை அன்று முகாம் நடத்தப்படும்.இம்முகாமில் ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுவர். நாளை முஹர்ரம் பண்டிகை என்பதால் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட முகாமானது நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிஆர்ஓ ராஜசேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூர் கண்டவராயன்பட்டி பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு, கையடக்கக் கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மதுரை திருமங்கலத்தில் நேற்று இரவு அனைத்து சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர், திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையின் முடிவைப்பொறுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு, தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி உடைய நபர்கள் சென்னை திராவிட மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் நேரடியாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ ஜூலை 19 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தொழில்நுட்ப சேவை மையம் ராக்கெட் ஏவுதள அடித்தள கட்டமைப்பு போன்றவைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன. ஜூலை 22ஆம் தேதி 2.30 மணி வரை ஆவணங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் 22ஆம் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சியும், 23ஆம் தேதி நாட்டுக்கோழி மற்றும் காடை வளர்ப்பு பயிற்சியும், 24ஆம் தேதி முயல் வளர்ப்பு பயிற்சியும் நடைபெறுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும், தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் கையெழுத்து போட்டிகள் நடைபெற உள்ளன. தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 23ம் தேதி காலை 10 மணியளவில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், பிற்பகல் 2 மணியளவில் 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நடைபெறும் என தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.