Tamilnadu

News May 7, 2024

சிவகங்கை:  இளநீர் விலை ஏற்றம்

image

அக்னி நட்சத்திரம் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் பொதுமக்கள் உடல் சூட்டை தணிப்பதற்காக இளநீர் கடைகளை தேடி வருகிறார்கள். இதனால் இளநீர் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இளநீர் திருப்புவனம் சாலையோர கடைகளில் ஒரு இளநீர் 70ரூபாய்க்கும், செவ்விளநீர் 80 ரூபாயக்கும் விற்கப்படுகிறது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகுகிறார்கள் .

News May 7, 2024

தூத்துக்குடி: பெண் தற்கொலை

image

சாயர்புரம் பட்டாண்டி விளையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். பேச்சியம்மாள் அடிக்கடி செல்போனில் பேசுவதை ஸ்ரீராம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 7, 2024

ஜோலார்பேட்டையில் வாலிபர் பலி

image

மேற்கு வங்காளம் பார்பரா பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் லாகூர் (44). இவர் நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது திடிரென வலிப்பு நோய் ஏற்பட்டு கிழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.

News May 7, 2024

திண்டுக்கல் அருகே ஒருவர் வெட்டி கொலை

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சோலையன் மகன் ஆண்டார்(55). இவர் தனது வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News May 7, 2024

தருமபுரி: வேலை செய்யும்போது உயிரிழந்த சோகம்!

image

தருமபுரி வட்டம் குண்டலபட்டி அருகே கிணற்றில் வேலை செய்யும்போது தவறி விழுந்து இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக நேற்று(மே 6) மாலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த மாரியப்பன் என்பவரை இறந்த நிலையிலும், மற்றொரு நபரை காயங்களுடனும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 7, 2024

பூதலூர்: சோழர் கால நந்தி, விஷ்ணு சிலைகள் கண்டெடுப்பு

image

பூதலூர் அருகே சித்திரக்குடியில் சத்தியா என்பவரின் நிலத்தில் நந்தி மற்றும் விஷ்ணு சிலைகள் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் ஆய்வில் ஈடுபட்டார். அதில், இந்த சிலைகள் கி.பி. 9 முதல் 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், சோழர் காலத்தில் முக்கிய பகுதியாகவும் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

News May 7, 2024

வாக்கு எண்ணும் மையம்: விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 7, 2024

சேலத்தின் அடையாளமான ஏற்காடு தலம்!

image

சேலத்தில் கிழக்கு தொடர்ச்சிமலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள சுற்றுத் தலமாகும். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகின்ற இந்த ஏற்காடு 20 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. 383 சகிமீ கொண்ட ஏற்காட்டில் பல பூங்காக்கள், ஏரிகள், படகு சவாரி, பாரா கிளைடிங், கோயில்கள் என பல இடங்கள் இங்குள்ளன. இதன் காலநிலைக்காகவும் , பசுமைக்காகவும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

News May 7, 2024

புதுக்கோட்டை அருகே அதிரடி ரெய்டு

image

விராலிமலை- மணப்பாறை சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து காலாவதியான பொருள்களை கைப்பற்றி அழித்து அபராதம் விதித்தனர். புகையிலைப் பொருள்கள் குறித்தும் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கொடும்பாளூர் சுகாதார ஆய்வாளர் மாரிக்கண்ணு, செல்வராஜ், விமல், சதீஷ்குமார், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

News May 7, 2024

கடலூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் தினகரன் (23). இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்தார். ரெட்டிச்சாவடி அருகே வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு கட்டையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினகரன் அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!