India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வந்தவாசி அடுத்த வடநாங்கூர் கூட்டுச்சாலையில் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து காஞ்சிபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 150 நெல் மூட்டைகளை இன்று காலை ஏற்றிச் சென்ற லாரி வடநாங்கூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்நிகழ்வில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் உள்ளிட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெப்ப அலை தற்காப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், தேவை இன்றி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியிலில் வர வேண்டாம், சன் கிளாஸ் அணிய வேண்டும் , விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கோவை கொடிசியாவில் இருந்து ரூ. 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை கொண்டு சென்ற சரக்கு வாகனம் நேற்று இரவு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சமத்துவபுரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது, வாகனத்துக்கு முன்னால் சென்ற லாரியின் மேல் மூடப்பட்டிருந்த தார்பாய் கழன்று காற்றில் பறந்து வந்து சரக்கு வாகனத்தின் முன்பகுதியில் விழுந்ததால் நிலை தடுமாறிய வாகனம் கவிழ்ந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு இரண்டு கட்டங்கள் பயிற்சி நிறைவு பெற்றுள்ளது. தற்போது மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நடைபெற்றுக் வருகிறது. எனவே நீச்சல் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் உரிய பயிற்சித்தொகையினை செலுத்தி கற்றுக்கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆதேஷ். விடுமுறைக்காக கிருமாம்பாக்கம் பனித்திட்டு சுனாமி குடியிருப்பில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். +2 தேர்வில் ஆதேஷ் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது.இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை, வெப்ப அலை எதிரொலியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வெப்பத் தாக்க நோய்களுக்கான 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம். கட்டிட தொழிலாளர்கள் வெயிலில் அதிக நேரம் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொடை வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் வகையில் அடுத்த இரு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் கொடை வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் வகையில் அடுத்த இரு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் வசித்து வரும் இடையபட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவர் இன்று காலை அவரது காரை இயக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.