India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் 55 ஸ்பாக்களுக்கு இன்று(மே 7) போலீசார் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்ததாக ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெயிண்டர் செல்வகணபதி (36), இவர் நண்பர்கள் 4 பேருடன் நேற்று பல்லாவரம் அடுத்த பொழிச்சலூருக்கு வந்துள்ளார். அப்போது அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின் அங்குள்ள கல்குட்டையில் குளித்தபோது செல்வகணபதி ஆழமான பகுதிக்கு சென்று மாயமானார். தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவும் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இன்றும் தேடி வருகின்றனர்.

மாநில அளவில் சிறந்த தரம், ஏற்றுமதி, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது மற்றும் மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள் பேம் டி.என்., (FaMeTN) awards.fametn.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 20.5.2024 கடைசி நாள் ஆகும். தகுதியான தொழில் முனைவோர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரையில் இருந்து இன்றிரவு 8.35 மற்றும் 10.05 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கத்தில், இந்த ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயங்கும். இது தவிர காட்பாடி- ஜோலார்பேட்டை சிறப்பு ரயில் மே 8, 10 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் விசுவக்குடி அணை, விசுவக்குடி அருகில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை, 2,500 ஏக்கர் விவசாய பாசன வசதிக்காக 2015 இல் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் 41 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்கிறது. இந்த அணையின் நீர் திறப்பிற்கு பின், லாடபுரம் ஏரிக்கு சென்று பின் வெங்கலம், வெண்பாவூர், வடகரை, பாண்டகாபாடி, மறவநத்தம் என சென்று கல்லாற்றின் வழியாக வெள்ளாற்றில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் நேற்று(மே 6) வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் 93.46% தேர்ச்சி பெற்றிருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் தனியார் பள்ளியில் படித்த இரட்டையர்களான ஜெர்ஷன் – ஜாஸன் ஆகியோரும் பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். உருவத்தில் ஒரே மாதிரி இருக்கும் இவர்கள், மதிப்பெண்ணிலும் பிரியாமல் ‘506’ பெற்று அசத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இன்று (மே 7) முதல்வர் ஸ்டாலினை மாணவர் சின்னத்துரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் குமார் (23). இவர் கடந்த வெள்ளிக்கிழமை வட்டப்பாறை அரசு பள்ளி அருகே சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (24) என்பவரை இன்று கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி மீது சந்தேகம் கொண்டு தனது நண்பனான குமாரை கொலை செய்ததாக மனோஜ் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

எண்ணூர், சத்தியவாணி முத்து நகர் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் (65) நேற்றிரவு தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 3 பேர் பாக்கியத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூதாட்டியின் பேரன் மகி என்பவரை அந்த கும்பல் கொலை செய்ய வந்திருப்பது தெரியவந்தது.

மயிலாடுதுறையில் உள்ள திருமணஞ்சேரியில் அமைந்துள்ளது கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில். இக்கோயில் குறித்து 275 தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பாடியுள்ளனர். சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் இங்கு நடைபெற்றது என்ற நம்பிக்கையும் உள்ளது. திருமணங்கள் குறித்து பலரும் இங்கு வேண்டிச் செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.