India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடி சோழா மஹாலில் வரும் 17.05.24 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவரும், தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவல்லிக்கேணி சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அண்ணா சாலையில் உள்ள பிரபல ஷோரூமில் வாசிங் மெஷினை 7 மாதத்திற்கு முன்பு வாங்கியுள்ளார். அது அடிக்கடி பழுதான நிலையில் வேறு வாசிங் மெஷினை கேட்டுள்ளார். சர்வீஸ் செய்து தருவதாக கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இளம்பெண் அந்த கடை முன்பு வாசிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் 100 பாரன்ஹீட் டிகிரி பதிவாகியுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தொடர்ந்து கனமழைக்கு சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளதாக இன்று திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

ஆவடி காவல் ஆணையரகப் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற 28 குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடையே ஒப்படைக்கும் நிகழ்வு இன்று ஆவடியில் நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் கி.சங்கர் கலந்து கொண்டு 185 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 398 கைப்பேசிகளை உரியவரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமன்னார்கோட்டை பகுதியில் அரசு நலத்திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் கீழமுடிமன்னார்கோட்டை பகுதிக்கு சென்று வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை, செங்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அவரது உறவினரான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சைல்ட் லைனில் வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தளி சட்டமன்றத் தொகுதியில் யானைகள் தாக்கி தொடர் மனித உயிர் பலியாவதை கண்டித்து வனத்துறை அலுவலகம் முன்பு சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் DFO, DSP தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒற்றை யானைகளை காட்டுக்குள் விரட்டப்படும் எனவும் யானைகள் ஊருக்குள் வராமல் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 22 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.