India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இறுதி நேரத்தில் பண பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதி மீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்திருக்கிறது. மேலும், துணை ராணுவம், காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

டெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு புதுச்சேரி அரசு கோரி உள்ள நிதியை ஒதுக்கி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் நேற்று சின்னசேலம் நண்பர்கள் குழு மற்றும் மகாபாரதி இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் 29 ஆவது, தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆண்கள் அணி பிரிவில் சின்னசேலம் அணி முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் சின்னசேலம் அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மகாபாரதி கல்லூரி தாளாளர் பரிசுகளை வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10,12 ஆம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு 2022−2023 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அதன்படி 15 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 1,50,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் 10க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராமங்கள் நிறைந்த நம்ம மாவட்டத்தில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ, சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே போலி மருத்துவர்கள் குறித்த விழிப்புடன் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியரக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் ஜூலை 12 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், புதிய சட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், அடிப்படை பிரிவுகளில் உள்ள தவறுகளை திருத்தவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் கோரிக்கை வைத்தனர்.

கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி நேற்று(ஜூலை 8) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட குடில்களில், தோட்டக்கலை செடிகள் வளா்ப்பு தொழில்நுட்பங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலை பயிா்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் இணையவழி தொழில்நுட்பங்கள், ஆளில்லா வான்கல தொழில்நுட்பம் உள்ளிட்ட பட்டய படிப்புகள், கூடுதல் சான்றிதழ் படிப்புகளும் நடைபெற உள்ளன என்றார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறும்பட போட்டி குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பெண்களுக்கு எதிரான சைபர் புல்லிங், டிஜிட்டல் ட்ரோலிங் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு என்ற தலைப்பின்கீழ் வீடியோ ஒன்றை 4 நிமிடங்களுக்குள் தயாரித்து adspcwctpt@gmail.com அனுப்ப வேண்டும். இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் 2 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே நெல்லை – பாலக்காடு பாலருவி ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க தூத்துக்குடி ரயில் பயணிகள் சங்க தலைவர் பிரம்மநாயகம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.