India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், UYEGP என்ற திட்டம் செயல்படுத்தப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் திட்ட முதலீட்டில் ரூ.3.75 லட்சம் மானியத்துடன் வழங்கப்படுகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார். வயது வரம்பு: பொதுப்பிரிவு 45, சிறப்பு பிரிவு 55. தேர்ச்சி: 8ம் வகுப்பு. விண்ணப்பிக்க: www.msmeonline.tn.gov.in/uyegp

வார இறுதி விடுமுறை, அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளம்பாக்கத்தில் இருந்து 2ஆம் தேதி 295 பேருந்துகள், 3ஆம் தேதி 325 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து, 2, 3 ஆகிய தேதிகளில் தலா 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆக.4ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பதிவு கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று ஒரு நாள் மட்டும் பயிர் காப்பீடு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார்

தென்காசி உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய(ஆக.,1) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.40, வெண்டைக்காய் ரூ.50, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.120, மிளகாய் ரூ.60, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50, இஞ்சி ரூ.160, மாங்காய் ரூ.60.

கோம்பை பகுதியை சேர்ந்தவர்கள் அய்யனார்-ஆர்த்தி தம்பதி. இவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பொன்ஆண்டவர், பொன்சண்முகநாதன் ஆகியோர் ரூ.17.60 லட்சம் பெற்றனர். மேலும் இந்த தம்பதியின் உறவினர்கள் 5 பேரிடமும் இதே காரணத்தை கூறி ரூ.36.80 லட்சம் பெற்றுகொண்டு வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரில் தேனி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் இருவரையும் நேற்று(ஜூலை.31) கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு ஆற்றுப்படுத்துனர் பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பபூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 42 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் முகவரிக்கு அனுப்பலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளி குழந்தைகளின் கல்வி சார்ந்த தேவை பிரச்சனைகளை குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடும் கல்வி வளர்ச்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதம் தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான ஒருங்கிணைப்பாளராக முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சுடலைமுத்து என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(ஜூலை 1) முன்னோடி வங்கி சார்பாக வங்கி அலுவலர்கள், கல்லூரி பொறுப்பு பேராசிரியர்கள் & கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்பினை ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நிலுவையில் உள்ள கல்வி கடன் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு கல்வி கடன் வழங்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி தனியார் ரிசார்ட் பகுதியில் நேற்று(ஜூலை 31) இரவு திடீரென யானை வந்தது. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு பட்டாசு வெடிக்கச்செய்து யானையை வனத்திற்குள் விரட்டியுள்ளனர். யானை வனப்பகுதிக்குள் செல்லும் காரணத்தால் தற்போது அப்பகுதியில் வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பர். வரும் 3ஆம் தேதி சேலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ஆக.4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சேலத்திற்கும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.