India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம் தேனி வட்டத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 9 மணி வரை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள் திட்டங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாளை கோர்ட் அருகில் உள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபம் அருகில் உள்ள 5 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நெல்லை போலீஸ் உதவி கமிஷனர் பரிந்துரையின்படி நாளை (ஆக 20ம் தேதி) ஒரு நாள் மட்டும் மூடப்பட வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் குமார் தலைமையில் கலந்து கொண்டு காலாப்பட்டு சொலாரா ஆக்டிவ் பார்மா சயின்ஸ் தீ விபத்து சிறுவர் மரணம், குடியிருப்பு மக்கள் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தலைமை நீரேற்று நிலையத்தில் மின் வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதில் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்யப்படவுள்ளதால் இன்று (ஆக.20) மற்றும் நாளை (ஆக.21) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 3 ஆண்டுகள் பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கான முழு செலவையும் தாட்கோ ஏற்றுக் கொள்ளும். இதற்கு www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரகத்திற்கு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளராக சிவசக்தி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மதுரை மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் மதுராந்தகம் சாரகத்தின் புதிய துணை கண்காணிப்பாளராக மேகலா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அரியலூர் பெரம்பலூர் சாலையில் சத்திரம் அருகே சாலையை கடக்க முயன்ற லட்சுமி என்ற பெண் மீது சௌந்தர் என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் லெட்சுமி படுகாயமடைந்தார் இதனையடுத்து லட்சுமி சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கடத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அன்பழகன் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு பொது நூலக துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனுசியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நேற்று கடத்தூர் த தென்கரைக்கோட்டை காந்திநகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வயநாடு பேரிடர் நிதி சேர்த்தனர்.

தி.மலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி இந்த கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 21.08.2024 அன்று நடைபெறும். முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் காலை 9.00 மணிக்கு சம்பந்தப்பட்ட துறைக்குச் சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று திங்கட்கிழமை 12 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எந்த ஒரு உண்மைத்தன்மையற்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும் தவறான தகவல்களை சட்டப்படி குற்றம் எனவும் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமுடன் தகவல்களை பகிர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.