India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமலாபுரம் அரசு மதுபான கடை அருகில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தபாண்டியன் நகரை சேர்ந்த அமர்நாத்(45) என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி ஈரோடு உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோடை வெயில் கொடுமையால் வாடி வந்த மக்களுக்கு ‘வாராது வந்த மாமணியாய்’ வந்த இந்த கனமழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியதோடு, அவர்களது மனங்களை மகிழ்வித்துள்ளது.

நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நேற்றைய ஏலத்துக்கு மொத்தம் 825 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,669 முதல் 7,699 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,495 முதல் 5,099 வரையிலும் என மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தண்டராம்பட்டு லயன்ஸ் மற்றும் லியோ சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், முதல் பரிசை வென்ற புதுவை குருவிநத்தம் ஹாக்கி அணி வீரர்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பாராட்டினார். பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், அருண்குமார், விளையாட்டு ஆர்வலர் பாலகுரு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் அவர்களின் தந்தை ஆர்.தூண்டி இன்று அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரது இறுதி ஊர்வலம் 08.05.2024 இன்று வாழக்கரை அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம், உடையாளூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் மதில்சுவர் அமைப்பதை வன்மையாக கண்டிப்பதாக ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தஞ்சை ஆட்சியர் உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை ஆழ்வார்புரத்தில், பள்ளி மாணவர்களுக்காக நடக்கும், கோடை கால பயிற்சி முகாமில்,
சமூக ஆர்வலர் அசோக் குமார், விளையாட்டுடன் கூடிய விழிப்புணர்வு வழங்கிடும் விதமாக, நுங்கு பற்றியும், அதில் இருக்கும் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களை பற்றி விளக்கினார்.
பின்னர், நுங்கு சாப்பிட்ட பிறகு அதில் வண்டி செய்து குழந்தைகளுக்கு விளையாடி காட்டினார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடலூர் மாவட்டத்தில் பாடம் வாரியாக 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரம், மொழிபாடம் -3 பேர்,இயற்பியல்-67,வேதியியல்-52, உயிரியல்-183,தாவரவியல்-10,விலங்கியல்-30,கணினி அறிவியல்-178,புவியியல்-1,உயிர் வேதியியல்-1,கணிதம்-222,வரலாறு-2,பொருளியல்-21வணிகவியல்-84,கணக்கியல்-18 மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில்-35 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த சேவி(50) சங்கராபுரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று (மே 7) டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பூட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.