India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இன்று 3வது நாளாக ஜமாபந்தி ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அதிகாரி ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில், பர்கூர் உள் வட்டத்திற்குட்பட்ட 33 மலை கிராம மக்கள் மற்றும் அத்தாணி, கீழ்வாணி, மூங்கில் பட்டி, நகலூர், கூத்தம்பூண்டி கிராம பகுதி மக்கள் கலந்து கொண்டு வீட்டு பட்டா மாறுதல் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

நாகை மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இணைந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஏடிஎம் மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. இம்முகாமில் 22 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தகுதியானவா்களை தோ்வு செய்தனா். இதற்காக, 450 மாணவா்கள் பதிவு செய்தனா். நோ்முகத் தோ்வில் 82 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் அலுவலகத்தில், மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூா் நகரியக் கோட்டத்துக்கு உள்பட்ட நகர எல்லை பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (MADITSSIA) நடத்திய பாரம்பரிய மற்றும் மூலிகை மருந்துகள் – ஆயுஷ் – மூன்று நாள் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. மூன்று நாளில் சுமார் 15,000 பார்வையாளர்கள், பார்வையிட்டதுடன், ரூ.3 கோடி மதிப்புள்ள வர்த்தக விசாரணைகளும் வந்ததாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கே.ராஜமுருகன் கூறினார்.

பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். காகிதங்கள், டம்ளர்கள், இளநீர் ஓடுகள் போன்றவைகள் கிரிவலப் பாதையில் ஆங்காங்கே குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராது சுத்தம் செய்து வருகின்றனர். தி.மலை வரும் பக்தர்கள் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சிதற விடுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.

வாலாஜா அடுத்த புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், திருவள்ளூர், திருத்தணி, செருக்கனுாரைச் சேர்ந்த 5 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை ஆர்டிஓ மனோன்மணி, ஆய்வு மேற்கொண்டு அந்த 5 பேரையும் மீட்டனர். பின்னர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 5 பேரையும் ஒப்படைத்தார்.

குளித்தலை – பேட்டைவாயத்தலை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், சேலம்-மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 24, 27ஆம் தேதிகளில் சேலத்தில் இருந்து கரூா் வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும் என்றும், அதே தேதிகளில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி எல்.எஸ்., மில்ஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் 2-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஜூன்.28 முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இரவு பகல் ஆட்டமாக தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்க உள்ளதாக எல்.எஸ்.மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இரவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் அண்ணா நகா், பாடி, அம்பத்தூா், கோயம்பேடு, அயனாவரம், பெரம்பூா், மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னையில், கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் மழை பெய்வதால், குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

காரைக்கால் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் CRP மற்றும் Book Keeper ஊழியர்கள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய். சரவணன் குமாரை நேற்று நேரில் சந்தித்து தங்கள் துறை சார்ந்த தேவைகளை கோரிக்கையாக வைத்தனர்.அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் திட்ட இயக்குனர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.