Tamilnadu

News May 9, 2024

சிவகங்கை: தொழில் முனைவோர்களுக்கு விருது!

image

சிவகங்கை மாவட்டத்தில் 2023 – 24 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தொழில்  முனைவோர்களுக்கு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு விருதுகள் தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியான தொழில் முனைவோர் awards.fametn.com என்ற தளத்தின் வாயிலாக மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார்.

News May 9, 2024

மதுரையில் துவங்கும் கிராமிய போட்டிகள்

image

காந்தி மியூசிய வளாகத்தில் உலக மியூசிய தினத்தை முன்னிட்டு வரும் மே.11 முதல் 16 வரை சிறியவர், பெரியவர்களுக்கு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாக காப்பாட்சியர் மருதுபாண்டியன் நேற்று அறிவித்துள்ளார். மே.11 இல் பல்லாங்குழி, 12 இல் தட்டாங்கல், 13 இல் தாயம், 14 இல் நொண்டி, 15 இல் கிட்டிப்புல், 16 இல் கோலிக்குண்டு போட்டிகள் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் 97900 33307  முன்பதிவு செய்யலாம்.

News May 9, 2024

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ்  நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனைய நிர்வாக இயக்குனர் பார்த்திபன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News May 9, 2024

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

image

மதுரையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் மதுரை வைகை ஆற்று வடகரை பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தாழ்வான நிலையில் உள்ள சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.

News May 9, 2024

மாணவர் சேர்க்கை 16ஆம் தேதி கடைசி நாள்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேற்று குறிப்பிட்டுள்ளார்.

News May 9, 2024

கள்ளக்குறிச்சி அருகே இருவர் கைது 

image

தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சரண்யாவிற்கு சொந்தமான காட்டுகொட்டகையை சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் சேதப்படுத்தி சரண்யா மற்றும் அவரது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அதில் இளையராஜா, கண்ணன் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

News May 9, 2024

பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத் துறையினர்

image

திண்டுக்கல் VOC நகரில் முருகன் என்பவர் வீட்டில் அதிகாலை சுமார் 5 அடி நீளமுள்ள கட்டுவீரியன் பாம்பு இன்று அதிகாலை 3 மணி அளவில் புகுந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அதிகாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுவீரியன் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News May 9, 2024

கேஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கேஸ் இணைப்பு பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களுடைய கேஸ் இணைப்பு ஆவணங்களை சரி பார்க்கும் பொருட்டு தாங்கள் இணைப்பு பெற்றுள்ள கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு சென்று தங்களுடைய கைரேகையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளுமாறு கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News May 9, 2024

489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தகவல் தெரிவித்தார். மேலும் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை
1098 அல்லது 151 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌.பிருந்தாதேவி தெரிவித்தார்.

News May 9, 2024

வேலூர்: மணல் கடத்திய லாரி பறிமுதல்

image

வேலூர் இடையன்சாத்து பகுதியில் பென்னாத்தூர் விஏஓ காசி நேற்று (மே 8) மணல் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மணல் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து 3 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் காசி ஒப்படைத்தார். டிரைவர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!