India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் இருப்பு பாதை காவல் நிலைய காவலர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகர் காந்தி சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் நடைமேடையில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரயில்வே காவல்துறையினர் வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலைய முகப்பில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இன்று (12.5.2024) ஏராளமான பயணிகள் இ பாஸ் தொடர்பான அறிவிப்புகள், இ பாஸ் சந்தேகங்களுக்கான தொலைபேசி எண்கள் . கடைசிநாள் போன்றவற்றை அதை பார்த்து தெரிந்து கொண்டனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலக புகழ் பெற்ற நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பின்னர் 1008 வடை மாலை சாத்திய பிறகு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம் தேன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மகா தீபம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முதல் தாராபுரம் சாலை தெற்கு காவல் நிலையம் வரை அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதன் காரணமாக பழைய பேருந்து நிலையம் முதல் தெற்கு காவல் நிலையம் வரை செல்லும் சாலை அடைக்கப்பட்டு வாகன ஓட்டிகல் மாற்று பாதையில் செல்ல மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்து புதூரில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் இன்று (மே.12) தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று அங்கு டார்ச்லைட் கிடைக்கப் பெற்ற நிலையில் இன்று 10 பேர் கொண்ட தடவியல் துறை அதிகாரிகள் குழு அவர் பிணமாக மீட்கப்பட்ட பகுதியில் வேறு எதுவும் தடயங்கள் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்கும் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் செவிலியர்கள். இந்த நாளில் மற்றவர்கள் சுகாதாரமாக, நலமாக வாழ, அர்ப்பணிப்புடன் கூடிய சேவையையும் கடின உழைப்பையும் நல்கும் செவிலியர் அனைவருக்கும் செவிலியர் தின நல்வாழ்த்துக்களை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு காவல் நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கடந்த இரு தினங்களுக்கு முன் நிர்வாண நிலையில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வண்புனர்வு செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பாதிரிவேடு போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா, சுவேந்தர், ஜெபகுமார் ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (41). இவர் அரசு கேபிள் டிவி ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை முத்துகுமார் தோட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது தோட்டத்தில் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக முத்துகுமாா் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் இன்று நேரில் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் சுட்டெரித்து வந்தாலும், சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வரும் மே.16 அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.