India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் லீலாவதி பணிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்: மேலப்புலியூர் கலைசெல்வன்,
ஆதனூர் ஜுவா , மங்கலமேடு அம்பிகா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய மாற்றுத்திறனாளி வீரர்கள் 2024 மார்ச்-30 அன்று நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் செல்லவுள்ளனர். இதில் வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன் மற்றும் ஆதனூர் ஜீவா பெரம்பலூர் முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உட்பட பலரிடம் வாழ்த்துகள் பெற்றனர்.

காட்டுப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தராததால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என இன்று நோட்டீஸ் வெளியிடபட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், மண்டபம் முன்பு 8 கொடி கம்பங்கள், 2 பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து, விழுப்புரம் தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ் அளித்த புகாரில், விழுப்புரம் அ.தி.மு.க., நகர செயலர் ராமதாஸ் உள்ளிட்ட 200 அ.தி.மு.க., வினர் மீது, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.

பேரளம் நகரத்தில் மழைநீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகால் நீண்ட நாட்களாக ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பேரளம் கடைத்தெரு சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் நாள் முழுவதும் மண், தூசிகள் பறந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே இதனை விரைந்து முடிக்க கடையடைப்பு போராட்டம் வரும் 04-04-2024 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட தெலுங்கு தேசம் கட்சியும் பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியும் இணைந்து தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இக்கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் கனி ஆறுமுகம் நேற்று வேட்பு மனு பரிசீலனைக்காக ஆட்சியரகத்திற்கு வருகை தந்து திரும்பி சென்றார். அப்போது அவரை வழி மறித்த நாம்தமிழர் கட்சியினர், எங்கள் சின்னத்தை பறித்து விட்டீர்கள் என கூறி தாக்கியுள்ளனர்.

இந்திய கூட்டணி கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் ஈஸ்வரன் ,பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் பணிமனையை திறந்து வைத்தனர்.

புதுச்சேரியில் உள்ள பெரிய மார்கெட்டில் கடை வைத்திருக்கும் பெண் மணி ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் 7 சவரன் தங்க நகைகளை தவர விட்டுள்ளார். இந்நிலையில், அதனை பெரிய கடை காவலர்கள் மீட்ட நிலையில் அப்பெண்மணியிடம் இன்று காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் நகைகளை ஒப்படைத்தனர். இதனை அடுத்து தவிர விட்ட நகையை கண்டுபிடித்துக் கொடுத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பேராவூரணி அருகே வீரியங்கோட்டை-உடையநாடு ராஜராஜன் நர்சரி, பிரைமரி பள்ளியில் மாணவ-மாணவிகள் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க பெற்றோர்களிடம் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தத்ரூபமாக வாக்கு பதிவு நடைபெறுவது போலவே இருந்தது. குழந்தைகள் அமைதியான முறையில் வாக்கு பதிவு செய்தனர்.

நாளை நடைபெறவுள்ள சேலம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கமல்ஹாசன் இன்று சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். இன்று ஈரோட்டிலும் நாளை சேலத்திலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று சேலத்திற்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.