India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்காலில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு பட்ட மேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் 164 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக அனுப்புவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனீஷ் கலந்து கொண்டனர்.

நாகை தேர்தல் (ஏப்ரல்.19) அன்று நடைபெறவிருக்கும் மக்களவை பொது தேர்தலில் 100% வாக்களிக்கும் பொருட்டு கடைகள், வர்த்தக மற்றும் உணவு நிறுவனங்கள், மற்றும் மோட்டார் போக்குவரத்து துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 கீழ் பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதனை மீறி செயல்படுபவர்கள் புகார் அளிக்க 9442912527 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம் ஆட்சியர் அறிவித்தனர்.

மதுரை வாடிப்பட்டி அருகே குட்டிமேக்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது சகோதரியின் மகளான காமாட்சி (17), இவரது வீட்டில் தங்கி கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பாததால் தனது சகோதரியின் மகள் காமாட்சியை கண்டுபிடித்து தர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையத்தில் சக்கர நாற்காலி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து சக்சம் என்ற பிரத்யேக செயலியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தண்டராம்பட்டு அருகே நாலாள்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜா, பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் காட்டில் மானை வேட்டையாடி இறைச்சியை விற்றதாக தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் சீனிவாசன் மற்றும் வன அலுவலர்கள் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல், பொன்னிமாந்துறை ஊராட்சியில் திண்டிமாவனம் குழுவினர் உருவாக்கியுள்ள மியாவாக்கி காட்டில் திண்டிமாவனம் தன்னார்வலர்கள் மற்றும் முதல்நிலை வாக்காளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தலைமையில் இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.

2024 மக்களவை தேர்தலையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் ஆட்சியர் ஷஜீவனா மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், 100கி.மீ. நடைபயணத்தின் 6-ம் நாளான
இன்று (12.04.2024) தேர்தல் விழிப்புணர்வு வாசகத்துடன் குடையினை பிடித்தபடி ஆட்சியர் விழிப்புணர்வு செய்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் R.காந்தி
அவர்கள் தொழிலதிபர்களை நேரில் சந்தித்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து, இந்திய கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் பலர் உடன் இருந்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5ஆம் தேதி வரை 21 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கம்பம் நகராட்சி ஆணையர் வாசுதேவன், தேனி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் ஆகியோர் விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.

தேனி பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் வேளாண் கல்லூரி பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கள் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பாகமாக வாழையை தாக்கும் அஸ்வினி பூச்சிகள் விளைச்சல் குறைப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.