India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாட்டாக்குடி ஊராட்சியில் இருந்து சத்தியசீலன் , குழல்கவி , தரனேஷ் ஆகிய 3 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து இந்தியா சார்பாக மலேசியாவில், நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டிக்கு செல்கின்றனர். இவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திமுக ஒன்றிய செயலாளர் மகாகுமார், சிபிஐ மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் உள்ளிட்ட பலர் வாழ்த்தினார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேஸ் நுகர்வோர் களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பியின் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் முகவர்கள் மற்றும் என்னை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு நுகர்வோர்கள் புகார்களை தெரிவிக்கலாம் என நேற்று தெரிவித்துள்ளனர்.

பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டு வருகிறது. இக்குழுவில் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிச்சாமி உள்ளனர். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த இபிஎஸ், ஒருங்கிணைப்பு குழுவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், இபிஎஸ் மீது கோவை ஜேஎம்.1 நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளித்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

பெரம்பலூர், அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு, அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சங்கத்தின் கிளைச் செயலாளர் அறிவழகன் தலைமையில் இன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் தொடர்ந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தால் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்கு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் எச்சரித்தார். பைக் சாகசம் செய்பவர் வாகன எண்ணுடன் எஸ்பி அலுவலக எண் 04652 220167 அல்லது 100 ஐ அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என கூறினார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன்பு அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலர் முனியசாமி தலைமை வகித்தார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி இணைச் செயலர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஒப்புதலோடு, அகில இந்திய மீனவர் காங். தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பரிந்துரை மற்றும் மாநில தலைவர் ஜோர்தான் ஆலோசனையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட மீனவர் காங். தலைவராக பழவேற்காடு ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காங். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.