India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி காண முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதில் இன்று சிறப்பு ஒதுக்கீடு பிரிவினர்களுக்கான விளையாட்டு துறை மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் இன்று நடைபெற்றது அது மட்டும் இன்றி வரும் பத்தாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை டிஎன்பிசி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுக வேண்டும் என ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (50). அரசு பஸ் கண்டக்டர். இவர் இன்று மதியம் கலவை டவுன் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தருவதற்காக வரும்போது சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது பைக் மோதி சம்பவ இடத்திலேயே ராமன் உயிரிழந்தார். கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கடலூரில் இன்று வெயிலில் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. வெயிலில் இருந்து சமாளிக்க கடலூர் பகுதி பொதுமக்கள் பழங்கள் மற்றும் ஜூஸ்களை குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடலூர், மஞ்சக்குப்பம் பகுதியில் சாலையோரம் தர்பூசணி பழ வியாபாரம் சூடுபிடித்துள்ளது. 1 கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை இன்று விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரியில் உள்ள தொப்பையாறு அணை, சென்னை-கள்ளிக்கோட்டை ஏழாம் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ள உப்பாளம்மன் கோயிலருகே தொப்பையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 1986 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை 299 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. பாசனவசதிக்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் இந்த அணை கட்டப்பட்டது.

கோபியில், காலாவதியான ஆவின் பிஸ்கட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில், தவறு செய்த ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில், ஆவின் நிறுவனமும் காலாவதியாகி விடும். இதுபோன்ற செயல்களால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கும். முதலமைச்சர் இதில் தலையிட்டு ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தி.மலை SKP கல்வி குழும வளாகத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி மாபெரும் ஓவியம் நடனம் பாடல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. 1முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு பரிசுகள் வழங்குகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் சார்பில் இந்த சில மாதங்களுக்கு முன்பாக அறநிலையத்துறை சார்பில் அகில உலகம் முருகன் மாநாடு நடத்த உள்ளது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று வரும் ஆகஸ்ட் மாதம் 24, 25, அன்று முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்த உள்ளது என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.

சேலத்தில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 2 மருந்துக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 7 கடைகளுக்கு ரூ.6.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 4 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஞ்சுகுழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(34) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இன்று குற்றவாளி கார்த்திக்கிற்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.