India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அவரை அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மையினர் துணை தலைவர் ஜானி ஜாவித் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும், அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்டத்தில் இன்று (13.07.2024) நடைபெறும் குரூப் I தேர்வினை 2,654 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு மையத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வருகை புரிய வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்கு எந்த காரணத்தையும் கொண்டு அனுமதிக்கப்படமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் 2 காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குனியமுத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அகஸ்டின் பிரபு ஆகிய இருவரும் சட்ட ஒழுங்கிற்கு பாதகமான செயலை செய்தாக கூறப்படுகிறது. இதனை அறிந்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இருவரையும் நேற்று(ஜூலை 12) தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யும். பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். மேற்கிலிருந்து மணிக்கு 19 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாம் அரியலூர் தாலுகாவில் ஜூலை.19 முதல் ஜூலை.20 வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வர். இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை ஜூலை.19 மாலை 4.30 மணிக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட பொது மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சம்பந்தப்பட்ட தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகள் பற்றி தெரிந்துகொள்ள Facebook, Twitter, Instagram ல் Kanniyakumari District Police என்ற பெயரில் உள்ள சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. ராயபுரம், பெரம்பூர், அண்ணா நகர், கோயம்பேடு, சைதாபேட்டை, கிண்டி, ஆயிரம் விளக்கு, அடையாறு, திருவான்மியூர், தி.நகர், வேளச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்குள்ள கூடுதல் கட்டிடத்தை இன்று(13.7.24) தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைக்க வருகை தர உள்ளார். மேலும் விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்கி பொதுமக்களுக்கு கடன் வழங்க உள்ளார். பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று கூட்டுறவு சங்க செயலாளர் ராஜன் தெரிவித்தார்.

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக அளித்து அதற்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.