India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 3 ஆம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி தனியாகவும், வரதராஜ பெருமாள் தனியாகவும் ஆபரணங்கள் மட்டும் அணிந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க குடை சூழ ஏகாந்த சேவை வந்தனர். தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பந்தநல்லுார் ஆய்வாளர் முத்துகிருஷ்ணராஜா ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், எம்.பி தேர்தலில் நின்றால் பெரிய ஆளாகிட முடியுமா, உன்னால் என்னை ஒன்னும் செய்ய முடியாது, துப்பாக்கியால் சுட்டு காலி செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக செயலாளர் ஸ்டாலின், எஸ்.பியிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் முத்துகிருஷ்ணராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி குருவிநத்தம் கிராமத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது. புதுச்சேரி கூடைப்பந்து கழகம், மேஜிக் கூடைபந்து சங்கம், ரவுண்ட் டேபுள் 104 அமைப்பு ஆகியவை சார்பில் நடக்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ரவுண்ட் டேபுள் 104 அமைப்பின் தலைவர் விக்னேஷ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த போட்டி வரும் 14ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தினமும் 1000 க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு செயல்படும் தலைக்காய சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு மருத்துவா் பணியிடத்தை நிரப்பக் கோரி கலந்தா் ஆசிக் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார். தலைக்காய சிகிச்சைப் பிரிவுக்கு 2 மாதங்களுக்குள் சிறப்பு மருத்துவரை தமிழகஅரசு நியமிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 13/7/2024ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு,மேற்கு,திருவெறும்பூர் ஸ்ரீரங்கம்,மணப்பாறை லால்குடி,முசிறி, மணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு,ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கும்படி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

நாகை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த ஆண்டவர், செந்தில், சாந்தகுமார், சேதுராமன், குமார் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 9 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் குமார் தவிர மற்ற 4 மீனவர்களும் நேற்று வரை வீடு திரும்பவில்லை. இதனால் அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் 3 படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 45 கிமீ தொலைவில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் OSC சேவை மையத்தில் வழக்கு பணியாளர் மற்றும் மூத்த ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . விருப்பமுள்ளவர்கள் https://ranipet.nic.in/ என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தபால் மூலமாகவோ நேரிலோ 22-07-24 க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி, கூடலூர் தொட்டமூலா பகுதியை சேர்ந்தவர் உம்மு சல்மா. இவர் நிலம் மறுவறை தொடர்பாக தாசில்தார் ராஜேஸ்வரியை அணுகியபோது அவர் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பரிமளா கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை தாசில்தாரிடம் நேற்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், நேற்று ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவிற்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் எனவும், 82% வாக்குப்பதிவை பார்க்கும்போது திமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை 12) காலை 7 மணி அளவில் தூரல் மழை பெய்தது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் 10 நிமிடம் தூரல் மழை பெய்தது. மேலும் நம்பியூர், கோபி, பவானி, அந்தியூர், தாளவாடி சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று இரவு வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.