India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து இந்தியா கூட்டணி கட்சியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம். மேலும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை டெபாசிட் இழப்பார் எனத் தெரிவித்தார்.

ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்தார். மேலும், மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்.6 பணி நாள் எனவும் அறிவித்துள்ளார்.

சத்தியமங்கலம் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மார்ச் 25 மதியம் 2 மணி முதல் மார்ச் 26 இரவு 9 மணி வரை பண்ணாரி-ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் அனைத்து வாகனங்களும் டி.ஜிபுதூர் நால்ரோடு-கடம்பூர்-ஆசனூர் வழியாக மைசூர் செல்லலாம் என சத்தியமங்கலம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகே. புரம் கட்டப்புளியை சேர்ந்தவர் பாபநாசம் (74). இவர் அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சம்பவத்தன்று கடைக்கு இட்லி வாங்க வந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் பாபநாசத்தை போக்சோ சட்டத்தில் இன்று ( மார்ச் 22 ) கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் பாராளுமன்ற தேர்தலையொட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே 2023-2024-ம் நிதியாண்டில் 31.03.2024 அன்று முடிவடையும் பேருந்து அட்டையினை 30-06-2024 வரை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் சங்கீதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

பேச்சிப்பாறை அருகே வலிய-ஏலா பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற இளைஞர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிணந்தோடு பகுதியில் வைத்து இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரூர் வட்டம் சேலம் நெடுஞ்சாலை மஞ்சவாடி கணவாய் அருகில் மார்ச் 22 ஆம் தேதி இரும்பு தளவாடங்கள் ஏற்றிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் (லாரி) டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது.

ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (45 ). இவர் இன்று காலை மினி லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். லாடவரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வரும்போது சாலை ஓரம் இருந்த பனைமரத்தில் நிலை தடுமாறி மினி லாரி மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

மதுரை மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் வழக்கம் போல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கல்வி பாதிப்பதாக அதனை மாற்றக் கோரி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். விசாரணையில், வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்ற இயலாது என நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் வழக்கம் போல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

வடமதுரை பகுதியில் கடந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மனோஜ் குமார்( 21) என்ற இளைஞரை வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி இன்று 21ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3000 அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.