India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கீழக்கரையை சேர்ந்த ஷியாம் பிரகாஷ் என்பவர் ஏர்வாடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தனது நகையை திருப்புவதற்காக இன்று ரூ.5லட்சத்தை எடுத்துக் கொண்டு ஏர்வாடிக்கு காரில் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேலுமலை காட்டில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை உணவு தேடி சாலையோரங்களில் காத்து கிடக்கின்றன. சில நேரங்களில் உணவுக்காக சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. எனவே வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பட்டு அறையில், பறக்கும்படை வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (20.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 21-ல் பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல் துறை அறிவித்திருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொது ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கௌகாத்தி ரயில் நிலையத்தில் பெங்களூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் வந்து நின்றது. அப்போது இன்ஜினில் இருந்து 11-ஆவது பெட்டி சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் கிரீஸ் இல்லாததால் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனால் அந்த பெட்டியை கழட்டி விட்டுவிட்டு ரயில் பெங்களூர் நோக்கி சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர் .

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 32 மனுதாரர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் என்ற இடத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு டாரஸ் லாரியில் மரபிளைவுட் ஏற்றிச் சென்ற லாரி இன்று (மார்ச்-20) திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுனர் மற்றும் தீயணைப்பு துறையினர் வாகனத்தின் தீயை அணைத்ததால் பல லட்சம் மதிப்புடைய மர பிளைவுடுகள் தப்பின. இதுகுறித்து படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புதிதாக துணை கண்காணிப்பாராக சூரக்குமரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பெரியகுளம், தென்கரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போடு காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமைன்புரம் கிராமத்தில், விவசாயி துரைசாமி என்பவரின் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. இதில் டிராக்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Sorry, no posts matched your criteria.