India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் https://theni.nic.in என்ற இணையதளம் மூலம் டிச.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர் கூட்டம் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பயணம் செய்யும் நேரங்களில் வாகனங்களை பொறுப்புடனும், சமூக அக்கறையுடனும் இயக்கினாலே விபத்தில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என செங்கல்பட்டு காவல் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் எடுத்துள்ளனர். மேலும், சாலை விதிகளை கடைப்பிடித்தால் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வேகமாக இயக்குவது, சாகச பயணங்களில் ஈடுபடுவது, சக வாகன ஓட்டினை அச்சுறுத்துவது போன்ற செயல்கள் வேண்டாம்.
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள செங்கழுநீரோடை வீதியைச் சேர்ந்த வசந்த் (28), காமராஜர் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (28), சிகாமணி (30) ஆகிய 3 ரவுடிகளையும் பிடித்து, ரூ.15,000 மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் உள்ள அரியலுார் திருக்கை மற்றும் டட் நகர் ஊராட்சிகளின் எல்லை பிரிப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரியலுார் திருக்கை மக்களின் கருத்தை கேட்காமல், பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ.அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.
சென்னையில் செயல்பட்டு வரும் ‘ZOHO’ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெட்வொர்க் ஆபரேஷன்ஸ் இன்ஜினியர் (Network Operations Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் ZOHO-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம்.
கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவின் மூலம் காவலர்கள், நோயாளிகளையும், பொதுமக்களையும் சோதனை செய்த பின்னர் அனுமதித்து வருகின்றனர். இது மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
காய்கறி (கிலோவில்) தக்காளி ரூ.20-22, வெண்டை ரூ.30, கத்தரிக்காய் ரூ.30-35, புடலை ரூ.35, பீர்க்கன் ரூ.40-50, சுரைக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.40-60, கறிவேப்பிலை ரூ.45, கொத்தமல்லி ரூ.35, கேரட் ரூ.58, பீன்ஸ் ரூ.36-40, காலிபிளவர் ரூ.20-25, முள்ளங்கி ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.52-65, சின்ன வெங்காயம் ரூ 60-65, இஞ்சி ரூ.50, தேங்காய் ரூ.15-20-25, அவரை ரூ.50 விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் மாநகரம், கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜிம் உரிமையாளரான மகாதீர் முகமது (35) மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக ஜிம்மிலேயே உயிரிழந்தார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து வந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று(நவ.18) கலெக்டர் சங்கீதா சிறுவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், பின்னர் சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். மேலும் சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்
Sorry, no posts matched your criteria.