India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையில் நேற்று இரவு சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் பொன்.பாலகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ரஞ்சன் குமார் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, விளாப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் குழந்தைகள் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தியா நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக திருமாவளவன், அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுவதால் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. அதிமுக வின் அதிதீவிர விசுவாசியாக திகழ்ந்த கார்த்தியாயினி ஜெயலலிதா மறைந்த பின் ஒரு சில மாதங்களிலேயே பாஜகவில் இணைந்தார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன மக்களே?

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு கடலூர்,திருவந்திபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரது தாய்க்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவர் நேற்று அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிந்து கேசவனை தேடி வருகின்றனர்

கரூர் மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் செந்தில்நாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன மக்களே?

திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கும் , சென்னைக்கும் தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் வந்தே பாரத் இயக்க மத்திய ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நாகை மக்களவை வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் அல்லது அசோக் ரூபி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.