India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்கள் தேர்தல் செலவீனம் கணக்கீட்டாளர்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி , தேர்தல் செலவீன பார்வையாளர் வீ.டி.எஸ்எஸ்.நாகர்ஜீன் கிரான்டி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 3வது தளத்தில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் திருப்பெரும்புதூர் சந்தோஷ் சரண், காஞ்சிபுரம் மதுக்கர் ஆவேஸ் , மற்றும் வருமான வரி நோடல் அலுவலர் காஞ்சிபுரம் பி.பாலமுரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் மகளிர் திட்ட சார்பாக மகளிர் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாராளுமன்றத் தேர்தல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி இன்று 21.3.2024 நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட மகளிர் திட்ட குழு சிஓ ரஞ்சிதம் கம்பம் நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அப்போது ஆற்றல் அசோக்குமார் செய்தியாளர் சந்திப்பில், நான் போராளி அல்ல மக்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். ஈரோடு மாவட்டத்தில் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணவும் இழந்த தமிழக உரிமைகளை மீட்கவும் பாடுபடுவேன் என்றார்.

சித்திரை திருவிழாவில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் போது, வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரை அதிக விசையுள்ள குழாய்கள் மூலம் பீய்ச்சுவதற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சேலம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மலையரசன் ஆகியோரை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார், கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நாடாளுமன்ற தேர்தல் செலவின பார்வையாளர் போசு பாபு அலி தலைமையில் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் தொடர்பான செலவினங்களை எவ்வாறு கணக்கிடுவது, அதனைத் தொடர்ந்து, எப்படி கண்காணிப்பது அது தொடர்பான விபரங்களை எவ்வாறு சேகரிக்க, சேகரிக்கப்பட்ட விபரங்களையும், ஆவணங்களையும் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை தெரிவித்தார்.

புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் புதுவை சட்டப்பேரவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரவைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டபேரவை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (21.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நாகர்கோவில் அருகே அமைந்துள்ள பறக்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச்-15 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.