India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேலூர் அருகே சின்ன கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரதேவன். குடும்ப சூழல் காரணமாக கடந்த 8மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் அர்மேனியா நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 2 வாரத்திற்கு முன் வீரதேவன் பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர ஆட்சியருக்கு அவரது மனைவி லட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைச்சந்து பகுதியில் தனிப்படை போலீசார் இன்று (மார்ச் 20) ரோந்து சென்றனர். அப்போது சட்ட விரோதமாக டிப்பர் லாரி மூலம் செம்மண் கடத்திய வெங்கடேசன், சரத்குமார், ஆனந்த், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஈரோட்டில், காந்திஜி ரோட்டில் பிரபு என்பவருக்கு சொந்தமான பார்வதி பண்ணை முட்டை கடை உள்ளது. நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் பிரபு கடையை பூட்டி சென்றார். நேற்று காலை வந்தபோது, கடையின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.9,000 பணம் திருட்டு போனது தெரிந்தது. எனவே பிரபு அளித்த தகவலின்படி ஈரோடு – சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதுயொட்டி பாமக, பாஜகவினர் உடன் கூட்டணி அமைத்து கொண்டனர். இன்று ஜோலார்பேட்டை நகர பாஜகவினர் அப்பகுதியில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் நடராஜன், டி.கே.ராஜா மற்றும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கிருபாகரன் ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து மேலும் தேர்தலில் கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தேனியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக – அமமுக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக – அமமுக மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட ஆறு தொகுதியில் உள்ளடக்கியதாகும்.

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக படிவம் 12 D வழங்குதல் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஆய்வு செய்தார். பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி முதியவருக்கு படிவம் 12 D வழங்கினார். மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விடுபடாமல் படிவம் வழங்கிட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை பகுதியில் நேற்று திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் முகவர்கள் பணி செய்வது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

ஆரணி அருகே இராட்டிணமங்கலம் ஊராட்சிகுட்பட்ட இ.பி.நகரில் உள்ள ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில்
ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் இபி.நகர் குமார்
ஆசிரியைகள் உமாராணி, சோபனா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனஞ்ஜெய் இன்று பொறுப்பேற்றார். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்ட தனஞ்ஜெய் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். காவலர்கள் தனஜெயனை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். பழனியில் பணியாற்றி வந்த டிஎஸ்பி சுப்பையா தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.