India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆரணி மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை இன்று ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி வி கஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் இராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் தூசி மோகன், ஜெயசுதா, பன்னீர்செல்வம், பாரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன், தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வேட்பு மனுவை வழங்கினார்கள். இதில் வேட்பு மனுவை சரிபார்த்து பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், பின்னர் உறுதிமொழி ஏற்பு நகலை பூர்த்தி செய்து தருமாறு வேட்பாளர் செந்தில்நாதனிடம் வழங்கினார்கள். உடன் கூட்டணி கட்சி (ம) கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஷ் முன்னிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியின் ஜீ.சுர்சித் சங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக அவைத்தலைவர் ஜீவானந்தம்,
அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன், தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன், எஸ்டிபிஐ, திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஜிஸ் உடன் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 27-ஆம் தேதியுடன் நிறைவுப் பெற உள்ள நிலையில் சேலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ் இன்று தனது வேட்பு மனுவை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவியிடம் தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் சித்தாந்த கோவில் மற்றும் அப்பா பைத்தியசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார். பின் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோந்துங்கனிடம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் மனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

கடலூர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்பு அவர் கூறியதாவது, நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எங்களுக்கு முழுமையான மக்கள் ஆதரவு உள்ளது என கூறினார்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கையர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 25) நடைபெற்றது.இதில்
திருநங்கையர்களின் கரங்களில் 100% வாக்களிப்போம்,100% Vote , Myvote my pride,My vote my right, 19.04.2024 போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மெஹந்தி மூலம் எழுதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர் ஆகிய 6 சட்டம் மன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சு.வெங்கடேசன் இன்று மாவட்ட தேர்தல் நடத்து அலுவலர் சங்கீதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.