India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆரணி அருகே இராட்டிணமங்கலம் ஊராட்சிகுட்பட்ட இ.பி.நகரில் உள்ள ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில்
ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் இபி.நகர் குமார்
ஆசிரியைகள் உமாராணி, சோபனா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனஞ்ஜெய் இன்று பொறுப்பேற்றார். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்ட தனஞ்ஜெய் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். காவலர்கள் தனஜெயனை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். பழனியில் பணியாற்றி வந்த டிஎஸ்பி சுப்பையா தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வகையில் படிவம் 12 D ஐ வேலூர் சலவன்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளரிடம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 20) வழங்கினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் மார்ச். 25, 26 ஆகிய 2 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று வலியுறுத்தியுள்ளார்.

பாரதிய ஜனதா மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் (தனி) தொகுதி வேட்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ள வடிவேல் ராவணன் இத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என பாமகவினர் எதிர்பார்க்கின்றனர்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்தவர் ராஹா. எஸ் தமிழ்மணி(64). கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இவர் எண்ணெய் நிறுவனம் நடத்துகிறார்.
மனைவி – சகுமதி , மகன் – திலீபன், மகள் – யாழினி.
அதிமுகவின் நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.

இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை. அரிமளம் ஒன்றியம் இரும்பாடி காந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரவினா(23). இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த பிரவினா வீட்டில் பேனில் தூக்குமாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் எஸ்.ஐ.மனோகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அளித்த ஓட்டு சதவீதம் பற்றி விவரம்: குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றாகிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் 7,49,623 பெண் வாக்காளர்கள் 7,61,206 மூன்றாம் பாலினத்தவர்கள் 86 என மொத்த வாக்காளர்கள் 15,10,915 தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்

வேலூர் மாவட்டம் முழுவதும் 732 துப்பாக்கிகள் உரிமம் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதில் 519 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 212 துப்பாக்கிகள் வங்கி பயன்பாட்டிற்காக சான்று வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு துப்பாக்கி இன்னும் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றும் விதமாகவும் தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோலப்போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணைய உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.