Tamilnadu

News March 25, 2024

செங்கம்: மாணவர்களுக்கான சிறப்பு பூஜை

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தாெடங்கவுள்ளதால் செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில், ஸ்ரீஅனுபாம்பிகை
ரிஷபேஸ்வரர் திருக்கோயில் மற்றும் காக்கங்கரை ஸ்ரீவிநாயகர் ஆலயம் ஆகியவற்றில் அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்த அறங்காவலர் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News March 25, 2024

திருப்பத்தூர்: பதட்டமான வாக்குச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு

image

ஆம்பூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பதட்டமான  வாக்குச்சாவடிகளாக கருதப்படும் பி கஸ்பா ரெட்டி தோப்பு, சான்றோர் குப்பம், மற்றும் மேல்மிட்டாலம் வெங்கட சமுத்திரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாச்சம்பட்டு மற்றும் பேராம்பட்டு சோதனைச் சாவடிகளையும் எஸ்பி பார்வையிட்டார்.

News March 25, 2024

சிவகங்கை: பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

சிவகங்கை மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவ் இன்று (மார்ச்.25)தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னையைச் சேர்ந்த தேவநாதன் யாதவ் (62) எம்ஏ பிஹெச்டி முடித்துள்ளார். யாதவ மகாசபை தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராகவும் உள்ளார். இந்நிகழ்வில் தலைவர் மேப்பல் சக்தி உடனிருந்தார்.

News March 25, 2024

விளவங்கோடு அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக ராணி அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண் தங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 25, 2024

தேர்தல் விளம்பரங்கள் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மின்னணு ஊடகங்கள், திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக விளம்பரங்கள், காணொலிக் காட்சிகளை தேர்தல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் அறிவுறுத்தினார்.

News March 25, 2024

குமரி: அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மாநில அதிமுக  மீனவரணி செயலாளர் பசலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம்,எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

திருப்பத்தூர்: எல்ஐசி அலுவலகத்தில் அடிதடி 

image

வாணியம்பாடியில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி முகவருக்கும் கிளை மேலாளருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் எல்ஐசி முகவர் இருசப்பன் என்பவரை மூக்கு மீது குத்தியதில் ரத்தம் சொட்ட சொட்ட வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று திருவாரூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னாள் தலைவர் ராகவன் மற்றும் மாநில மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், தேர்தல் பிரசாரம் குறித்து திட்டமிடப்பட்டது.

News March 25, 2024

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

image

அதிமுக கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் விசுவநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்கை அறிமுகப்படுத்தினர் கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

சட்டை இல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது‌. இதனை தொடர்ந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள்பணியன் அணிந்தவாறு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 

error: Content is protected !!