India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1999 முதல் 2004 வரை தேனி மக்களவை உறுப்பினராகவும் 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவருக்கு வயது 60.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய அருகே உள்ள சின்ன மேலமையூர் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சின்ன முத்துமாரியம்மன் கோவிலில் இன்று (மார்ச்-24) 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வார இறுதி நாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நேற்றிரவு திருவண்ணாமலை செல்வதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். ஆனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இல்லாததால் தென் மாவட்டம் செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பிரியா நகர், அம்பிகா நகர், ராஜிவ் காந்தி நகர், காரணை புதுச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகளில் குப்பைகள் குவிந்தும் , கழிவுநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வெயில் காலத்திலும் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்றி கொசு மருந்து தெளிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள புனித சகாயமாதா கிறிஸ்தவ பேராலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சுமார் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் தென்னங்கீற்றால் செய்யப்பட்ட கிறிஸ்தவ சிலுவைகளை உயரே தூக்கி பிடித்தும், தோளில் சுமந்த படியும் வீதிகளில் ஊர்வலம் சென்றனர்.

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அறிக்கையில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா நாளை நீலகிரி வருகிறார். அவருக்கு கோத்தகிரியில் முற்பகல் 11 மணி, உதகையில் பகல் 12 மணி , கூடலூரில் மாலை 4 மணிக்கும் மாபெறும் வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் மடத்தில் இன்று மாகேஸ்வர பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து குருமகா சன்னிதானத்துக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: கே.கே நகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒருவாரமாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையிலிருந்து ஷேர் ஆட்டோவில் தாயமங்கலம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மதுரை நோக்கி ஆட்டோ சென்றபோது திருப்பாச்சேத்தி அருகே மாநாடு பாலம் அருகே சென்றபோது ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த கார் ஆட்டோவில் மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.