India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் இன்று (மார்ச் 27) தனது வேட்புமனுவை தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.

தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை இன்று, தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவினர் உடன் இருந்தனர். கோவையில் அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரிய முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகை நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமான உடல்நிலையில் உள்ள அனைத்து முன்னால் படைவீரர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04365299765 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாலை 3 மணி அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு செல்ல ஏதுவாக நாளை (மார்ச் 27) கூடுதலாக 240 பஸ்களும், மார்ச் 28இல் 80 பஸ்களும், மார்ச் 29இல் 240 பஸ்களும் என மொத்தம் 660 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.