India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாதவரம் மண்டலம், 27வது வார்டு, பெருமாள் கோவில் தெருவில் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் குமார், ரோஜா ஆகிய இருவர் குப்பைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வேலுச்சாமியின் வீட்டிலிருந்து வாங்கிய குப்பையை தரம் பிரித்தபோது 3 சவரன் செயின் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மண்டல அதிகாரிகள் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்கள் குமார் மற்றும் ரோஜா நகையை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக பண்டாரியாதவ் நியமனம் செய்யப்பட்டு, ராமநாதபுரம் விருந்தினர் மாளிகை அறை எண் 1இல் தங்கி பணியாற்றிவருகிறார். தொகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் (ம) வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள் (ம) புகார்களை தினசரி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நேரிலோ (அ) 9361541271, 04567-230416 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுக்க சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்ததால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் பணியாற்றி போலிசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .காவல் நிலையத்தில் வரும் பொது மக்களிடம் பெறும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் ரபியா, அப்துல் ஃபாரிக் ஆகியோருக்கு சொந்தமாக 70 ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(மார்ச் 26) மேச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றபோது 11 ஆடுகள் ஒன்றின் பின் ஒன்றாக மர்மமான முறையில் இறந்தன. இதனை அடுத்து ஆடுகள் உயிரிழந்தது குறித்து காரணத்தை அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

விருதுநகர் தொகுதிக்கு தற்போது வரை 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காங்கிரஸ் தேமுதிக பாஜக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுயேச்சை மாற்று வேட்பாளர் உள்ளிட்ட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் ரமேஷ்.இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று ரமேஷ் மோட்டார் சைக்கிளில் விராலிமலை அருகே சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் டாக்டர் ரமேஷ் பலியானார்.காரில் வந்த லோஙராஜ்,சரண்யா, சித்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி கீழ அம்பிகாபுரம் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் யுவஸ்ரீ (23). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம். ஏ முதுகலை ஆங்கில பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே மனமுடைந்த யுவஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை

மயிலாடுதுறை மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கத்தொகைகள் கைப்பற்றப்படுகிறது.இது தொடர்பாக மேல்முறையீடு ஏதேனும் இருப்பின் ஆட்சியர் அலுவலக தரைத்தளம் அறை எண் 45 மேல்முறையீடு குழுவினரிடம் மாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரக்கோணம் தொகுதியில் வருமானவரித்துறை சாா்பில் கண்காணிப்புக்குழு செயல்பட்டு வருகிறது. இது தொடா்பாக சந்தேகத்துக்கிடமான வகையில் பணப் பரிவா்த்தனை மற்றும் பணப்புழக்கம் தொடா்பான புகார்களுக்கு 93638 67057 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளாா்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியான தாமாக வேட்பாளர் விஜயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஈரோடு மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கராவிடம வழங்கினார்.
வேட்புமனு தாக்கலின் போது மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, வழக்கறிஞர் பழனிச்சாமி, ஆகியோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.