India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் மிட்டாளம் பகுதியை சேர்ந்த மணிமேகலை (40) தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் பகுதியில் உள்ள தனது மகளை பார்க்க வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் மணிமேகலையின் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏப்ரல் 29-ம் தேதி முதல் தொடர்ந்து 30 நாட்களுக்கு நடைபெறவுள்ள ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்களில் ஆடு வளர்ப்போர் தங்கள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தவறாமல் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஏரி கரையில் ஏழுமலை மனைவி பிரேமா என்பவரை அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் தாக்கிவிட்டு தப்பியோடினர். காயமடைந்த பிரேமா வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேமாவை தாக்கிய மூன்று இளைஞர்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் விருது, ரூ 1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 15 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னையில் வாகன ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளனர். அதாவது வாகன பதிவெண் பலகையில் தங்களின் பணியை குறிக்கும் வகையிலான ஸ்டிக்கர்களை உடனே நீக்க மே மாதம் 1ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது. இந்த கால அவகாசத்துக்குள் வாகன பதிவெண் பலகையில் உள்ள ஸ்டிக்கரை நீக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை அழகர்மலையிலிருந்து கடந்த 21 ஆம் தேதி புறப்பட்ட கள்ளழகர் ஏப்.23 இல் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து 5 நாட்களாக மதுரை மக்களின் மனங்களை குளிர்வித்த கள்ளழகர் நேற்று அழகர் மலையை வந்தடைந்தார். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ராமர் மகன் அருள்முருகன் (28) நேற்று முன்தினம் விளாங்குடி கணபதி நகரில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கொலை செய்த காமராஜர் சாலையை சேர்ந்த காளி ஆனந்த், நாகார்ஜூன், அருண்குமார் ஆகிய 3 பேரை நேற்று இரவு கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்து வருவதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 4 டன் எலுமிச்சை விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது 1 டன் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக 1 கிலோ எலுமிச்சை பழம் ரூ. 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுக்கூரை அடுத்த சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பவதாரணி (22). இவர் நர்சாக வேலை பார்த்து வந்தார். (ஏப்,26) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எண்ணெய் கேன் தவறி அடுப்பு மீது விழுந்து தீ உடல் முழுவதும் பரவியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி பவதாரணி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா பகுதிக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் 29.04.2024 அன்று முதல் 04.05.2024 வரை ட்ரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறக்கதடை விதிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.